Thursday, 23 March 2017

இந்த அரசின் கீழ் முஸ்லிம்களுக்கு எதிராக 64 வன்செயல்கள் - செய்தியாளர் மாநாட்டில் ஏ.எச்.எம். அஸ்வர்

இந்த அரசின் கீழ் முஸ்லிம்களுக்கு

எதிராக 64 வன்செயல்கள்

செய்தியாளர் மாநாட்டில் ஏ.எச்.எம். அஸ்வர்

(எம்.எஸ்.எம். ஸாகிர்)

இன்று இந்த நாட்டில் இனவாதம் சரித்திரத்தில் இல்லாதவாறு மிகவும் மோசமான முறையில் பரவி இருக்கின்றது. கொழும்பிலிருந்து நொச்சியாகமை வரை சென்ற மஞ்சள் காவி அணிந்த பிக்குமார்கள் இன்று முஸ்லிம்களுக்கு பலவாறும் அச்சுறுத்தலை விடுத்திருக்கின்றார்கள். இப்படியாக கிராம மட்டத்தில் எத்தனையோ இடங்களில்  இந்த முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதை சமுதாயம் மிகவும் விசமத்துடன் கண்டிக்கின்றது.எனவே, அரசாங்கம் இதனை உடன் நிறுத்த வேண்டும். முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுத்தான் அரசுக்கு வந்தோம் என்று சொல்லுகின்றவர்கள்  இப்படியான கிராமம் கிராமமாகச் சென்று முஸ்லிம்களுடைய இருப்பிடங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதற்கு சாக்குப் போக்குகள் கூறுவதன் மூலம் சமுதாயத்தை திருப்திப்படுத்த முடியாது.

இன்று (22) புதன்கிழமை கொழும்பு கொட்டாவீதி டாக்டர் என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் இடம்பெற்ற கூட்டுஎதிர்க்கட்சி ஊடக சந்திப்பின் போது முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் சார்பில் பங்கு கொண்ட அமைப்பின் செயலதிபர் ஏ.எச்.எம். அஸ்வர் மேற்கண்டவாறு கூறினார்.

இவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில்,

அளுத்கமயை ஒரு சாட்டாக வைத்து  முஸ்லிம்கள் மத்தியில் பொய்ப்பிரசாரங்கள் செய்து முஸ்லிம்களைத் திசை திருப்பி வாக்குகளைப் பெற்ற அரசாங்கம் இந்த அரசாங்கம். ஆனால், அது சில பல தவறுகள் நடைபெற்றதே தவிர, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக அதில் பங்கு கொள்ளவில்லை என்பதை தெளிவாக பல இடங்களிலும் மக்களுக்கு விளக்கிச் சொல்லி இருக்கின்றார்.  இதற்கிடையில் இருப்பிடங்களை இழந்து வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றவர்களுக்குரிய நஷ்டஈடு நாட்டின் பல இடங்களுக்கும் வழங்கப்படுகின்றது. இந்த நஷ்டஈடு அளுக்கமை முஸ்லிம்களுக்கு ஏன் இன்னும் வழங்குவதற்கு தாமதிக்கின்றனர் என்ற கேள்வியை நாம் கேட்கின்றோம்.

உடைந்த வீடுகளை, கட்டடங்களை, பள்ளிவாசல்களை, வியாபாரஸ்தாபனங்களை, அப்பொழுதே மீள்நிர்மாணம் செய்து கொடுத்ததை முஸ்லிம்கள் நன்கறிவார்கள். அப்படி இருக்கையில், ஒரு ஆடை விற்பனை நிலையத்தை இந்த அரசாங்கத்தின் கீழ்தான் தாக்கி இருக்கின்றார்கள். இதுமாதிரி பல இடங்களில், அதாவது 64 இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான விடயங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. எனவே நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் கூட பொறுப்பு வாய்ந்த ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அளுத்கம முஸ்லிம்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அது கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் சார்பாக நாமும் கேட்டுக் கொள்ள விரும்புகின்றோம் - என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

Loading...
  • வெளிநாட்டவர்கள் 903 பேர் கைது23.05.2015 - Comments Disabled
  • மேற்கு வெர்ஜீனிய மாநில வெள்ளப்பெருக்கு பிரதான பேரழிவு - ஒபாமா26.06.2016 - Comments Disabled
  • நிலையான அபிவிருத்தி, நல்லிணக்கத்தை எட்டுவதே இலக்காகும்: ஐ.நா சபையில் ஜனாதிபதி01.10.2015 - Comments Disabled
  • Why Former Royal Principal Is Not Interdicted?22.01.2016 - Comments Disabled
  • எட்கா உடன்பாடு கைச்சாத்திட்டால் நாடு தழுவிய ரீதியில் போராட்டம்!30.06.2016 - Comments Disabled