மைத்திரி அரசு முஸ்லிம்களின் பிரச்சினையை இன்னும் இனங்காணவில்லை : ஹுதா உமர் குற்றச்சாட்டு
நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்று இரண்டு வருடங்கள் தாண்டியும் சவூதியினால் கட்டப்பட்ட சுனாமி வீடுகளை சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்க இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது முஸ்லிம்களுக்கு செய்யும் துரோகமாகும் என ஹுதா உமர் தெரிவித்தார்.
இது பற்றி அவர் தெரிவிக்கையில்,
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவூதியினால் கட்டப்பட்ட வீடுகளை முஸ்லிம்களுக்கு வழங்க விடாமல் அன்றைய அரசில் இருந்த ஹெல உறுமய நீதிமன்ற தடையை பெற்றிருந்தது. ஆனாலும் ஜனாதிபதி நினைத்தால் அத்தீர்ப்பை வாபஸ் பெற வைக்க முடியும் என உலமா கட்சி அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளது. ஆனாலும் பாராளுமன்ற உறுப்பினர்களைக்கொண்ட கட்சி ஹெல உறுமய என்பதால் அதன் செல்வாக்கே ஓங்கியது. பல பாராளுமன்ற உறுப்பினர்களைக்கொண்ட முஸ்லிம் காங்கிரசும் இது விடயத்தில் மக்களின் வாக்குப்பலத்தை காட்டி வெல்ல முடியாத, கையாலாகாத கட்சியாக இருந்தது.

மஹிந்தவால் முடியாததை மைத்ரியின் நல்லாட்சி பெற்றுத்தரும் என்றே முஸ்லிம் சமூகம் நம்பியது. ஆனால் முஸ்லிம் சமூகத்தின் ஒரு பிரச்சினையை கூட மைத்ரி ரணில் அரசு இன்னமும் ஆராயக்கூட இல்லை.
சுனாமி வீடுகள் இதோ முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் என அரசு ஏமாற்றுகிறதே தவிர எதுவும் நடை பெறவில்லை. இன்னும் கொஞ்ச காலம் சென்றால் அந்த வீடுகளில் வளர்ந்துள்ள மரங்கள் அடர்த்தியாகி அந்த பிரதேசம் காட்டுக்குரியது என்று கூட இந்த முஸ்லிம் இனவாத அரசு கூறலாம்.
ஆகவே சுனாமி வீடுகளை முஸ்லிம்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசையும் பங்காளி கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறோம் என உலமா கட்சியின் உயர் சபை உறுப்பினர ஹுதா உமர் தெரிவித்துள்ளார்.