அமெரிக்காவில், கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின் போது, டிரம்ப் டவரின் தலைமையகத்தில், தொலைபேசி பதிவுகளை கண்காணிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா நிர்வாகத்தினர் உத்தரவிட்டதாக டிரம்ப் கூறியிருந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் எஃப்.பி.ஐ-க்கோ, அமெரிக்க நீதித்துறைக்கோ கிடைக்கவில்லை என்று எஃப்.பி.ஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமி கூறியுள்ளார்.
ஆதாரங்கள் அனைத்தும் மிகவும் கவனமாக ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ஜேம்ஸ் கோமே மற்றும் தேசிய பாதுகாப்பு முகமையின் இயக்குனர் அட்மிரல் மைக் ரோகெர்ஸ் ஆகிய இருவரும் அரிதான நிகழ்வாகக் கருதப்படும், நாடாளுமன்றத்தின் புலனாய்வுக் குழுவின் முன் சாட்சியம் அளித்தார்கள்.
கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்பதை எஃப்.பி.ஐ அதிகாரிகள் விசாரித்து வருவதையும் அந்த முகமையின் தலைவர் உறுதிப்படுத்தினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
