Tuesday, 2 May 2017

இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்து விட்டு மக்கள் வீதியில் கிடக்கின்றனர் - கருணா

கடந்த தேர்தலில் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்து வடக்கு, கிழக்கு மக

karuna-1்கள் பாரிய தவறிழைத்து விட்டதாக கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தற்போது காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் மே தின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்து விட்டு மக்கள் வீதியில் இருப்பதாக இதன்போது சுட்டிக்காட்டிய அவர், மட்டக்களப்பு மற்றும் யாழில் இரு மாதங்களாக மக்கள் வீதியில் இருப்பதாவும் கோப்பாபிலவிலும் மக்கள் அதுபோன்றே வீதியில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து வௌியிடுகையில்,

குப்பை மழை சரிந்து விழுந்து மக்கள் இறந்ததை கொழும்பில் இன்றே பார்கிறோம். இந்த அரசால் மக்கள் சொல்லொன்னா துன்பத்தை அனுபவிக்கின்றனர்.

ஆனால் ரணில் ஒரு கிழமைக்கு ஒரு நாட்டுக்கு செல்கிறார், எமது நாட்டுக்கு ஒன்றும் இல்லை. அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். அரசாங்கத்திற்கு சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் ஆதரவு இல்லை.

இலங்கையில் மஹிந்த ராஜபக்ஷ செய்தமை போன்ற அபிவிருத்தியை வேறு எவரும் செய்யவில்லை. வடக்கு, கிழக்கில் அவரது காலத்தில் பாதைகள் புனரமைக்கப்பட்டன. பாலம் கட்டப்பட்டது, மின்சாரம், குடிநீர் வழங்கப்பட்டது. மக்கள் தற்போது அதன் பலனை அனுபவிக்கின்றனர்.

ஆனால் தற்போதைய அரசாங்கம் வந்த பின் எந்த அபிவிருத்தியும் இல்லை.

ஆகவே, வரும் காலத்தில் இலங்கையிலுள்ள இனவாதம் மிக்க தமிழ் கட்சிகளை தூக்கி எரியவே நான் புதிய கட்சியை ஆரம்பித்தேன். எனது கட்சி இருக்கும் வரை மஹிந்த ராஜபக்ஷவுடனேயே இருக்கும். வரும் தேர்தலில் அனைத்து தமிழர்களும் அவரது பின்னால் அணிதிரள்வார்கள் என கூறிக் கொள்கிறோம், எனக் கருணா குறிப்பிட்டுள்ளார்.

Loading...