ஹிக்கடுவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் சந்தேகநபரொருவர் பொலிஸ் தடுப்பிலிருந்து தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள்ர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காலி உதவி பொலிஸ் அத்தியட்சகரால் உடன் அமுலுக்கு வரும் வகையில் இவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஹிக்கடுவை- களுப்பே பிரதேசத்தில் வசித்து வந்த சந்தேகநபரான பெண் 1400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதே தப்பிச் சென்றுள்ளார்.
தப்பியோடிய சந்தேகநபர் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில் காலி உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி இஹலவெலவின் ஆலோசனைக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.