அமெரிக்க ஜனாதிபதிக்கு சந்தேகத்திற்கு இடமான கடித உறைகளை அனுப்பிய முன்னாள் கடற்படை வீரர் ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
வில்லியம் கிளைட் அலென் என்ற 39 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதிக்கு குறிப்பிட்ட நபர் அனுப்பிய கடித உறைகளில் கஸ்டர் விதைகள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவற்றை உட்கொண்டால் பாதிப்பு ஏற்படலாம் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் கடற்படை தளபதி ஜோன் ரிச்சட்சன் ஆகியோருக்கும் குறிப்பிட்ட நபர் இவ்வாறான கடித உறைகளை அனுப்பியுள்ளார்.
இந்த கடித உறைகளை தனியான இடத்திற்கு கொண்டு சென்ற அதிகாரிகள் பின்னர் அவற்றை எவ்பிஐயிடம் வழங்கியுள்ளனர்.
திங்கட்கிழமையே டொனால்ட் டிரம்பிற்கு கடித உறைகளை அந்த நபர் அனுப்பி வைத்துள்ளார் ஆனால் அவை வெள்ளைமாளிகையை சென்றடையவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.