முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவின் உத்தியோகப்பூர்வ அறை கடந்த வெள்ளிக்கிழமை சீல் வைத்து மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
நாலக சில்வாவின் அறைக்குச் சீல் வைப்பதற்கு முன்பாக, அங்கிருந்த 2 மடிக்கணினிகளை மேலதிக விசாரணைகளுக்காக இரகசியப் பொலிஸாரின் பொறுப்பின் கீழ் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.