முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் மாத்திரமே பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் சீனா பாரிய அளவான முதலீடுகளை இலங்கையில் மேற்கொண்டது. அந்த முதலீடுகளை தவிர வேறு எந்த முதலீடுகளையும் சீனா இலங்கையில் மேற்கொள்ளவில்லை.
அத்தடன், புலிகள் வடக்கில் இருந்த போது, தெற்கில் பொருளாதாரம் வீழ்ச்சிப்பாதையில் சென்றுக்கொண்டிருந்தது. அவ்வாறான நாட்டை பலப்படுத்தி காண்பித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆட்சிப்பொறுப்பை வழங்குவதால் மாத்திரமே பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.