ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதி செய்யும் விதமாக தொலைபேசியில் கலந்துரையாடப்பட்டதாக கூறபப்டும் விவகாரத்தில் கட்டாய விடுமுறையில் அனுப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் பயன்படுத்திய அலுவலகத்தில் இருந்து பெரும் தொகை ஆவணங்கள் விசாரணைகளுக்காக சி.ஐ.டி.யினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அந்த அலுவலகத்துக்கு சீல் வைத்து இவ்வாறு ஆவணங்கள் விசாரணைகளுக்காக கையேற்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதனிடையே ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதி செய்யும் விதமாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் (ரி.ஐ.டி.) பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தொலைபேசியில் கலந்துரையாடியதாக கூறப்படும் விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இதுவரை 40 வரையிலான வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி அதில் ஒரு அங்கமாக நேற்று களுத்துறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரண்மல் கொடித்துவக்குவிடம் சி.ஐ.டி. சுமார் மூன்றரை மணி நேரம் சிறப்பு வாக்கு மூலம் ஒன்றினை பதிவு செய்தது.
நேற்று காலை 10.00 மணி முதல் அவரிடம் சி.ஐ.டி. தலைமையகத்தில் வைத்து இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அதனைவிட ஏற்கனவே அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், குற்றவியல், திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஆகியவற்றின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரான எம்.ஆர். லதீப், போக்குவரத்து மற்றும் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நத்தன முனசிங்க ஆகியோரிடமும், உளவுத்துறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவிடமும் கடந்த வார இறுதியில் சி.ஐ.டி. சாட்சியமாக வாக்கு மூலங்களைப் பதிவு செய்துகொண்டுள்ளன.
இந்த சதி விவகாரத்தை வெளிப்படுத்திய நாமல் குமாரவிடம் ஏற்கனவே 3 தடவைகளாக சுமார் 24 மணிநேர வாக்குமூலம் பெறப்பட்டுள்ள நிலையில், இச் சதி குறித்து அவர் வெளிப்படுத்திய குரல் பதிவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளின் சாட்சியங்களாக தற்போது பொலிஸ் அதிகாரிகளின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் தலமையகம் தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே நாமல் குமார வெளிப்படுத்திய தொலைபேசி கலந்துரையாடலில் பெயர் கூறி கலந்துரையாடப்பட்ட வரக்காப்பொல பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜனகாந்த, சி.ஐ.டி .உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ், பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ உள்ளிட்டோரிடம் சி.ஐ.டி. முதலில் வாக்குமூலம் பெற்றிருந்தது.
எவ்வாறாயினும் இந்த சதி விவகாரத்தில் இதுவரை குற்றம் சாட்டப்பட்டு வரும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவிடம் எந்த விசாரணைகளும் நடத்தப்படவில்லை. ஏனைய வாக்குமூலங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட பின்னர் இறுதியாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலகவின் வாக்கு மூலத்தை பதிவு செய்யவுள்ளதாக சி.ஐ.டி. தெரிவித்தது.
இந்த வார இறுதிக்குள் இந்த விவகாரத்தில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகபபுச் செயலர் கோத்தாபய ஆகியோரிடமும் சாட்சியங்களைப் பெற்றுக்கொள்ள சி.ஐ.டி. எதிர்பார்த்துள்ளதாகவும் பெரும்பாலும் அவ்விரு வாக்கு மூலங்களின் பின்னர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படலாம் எனவும் சி.ஐ.டி. அதிகாரிகள் தெரிவித்தனர்.