ஜே.ஜீ. ஸ்டீபன், ப. பன்னீர் செல்வம்)
அரசியலமைப்பின் 18ஆவது திருத்திற்கு வாக்களித்தன் மூலம் ஏற்பட்ட விளைவுகளையும் பலா பலன்களையும் அனுபவித்து விட்டோம். அவ்வாறு அச்சட்டத்திற்கு ஆதரவு அளித்தமைக்கு mஇன்று வருந்துகின்றேன் என்று அமைச்சர் ஹக்கீம் இன்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 19 ஆவது திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்து அது நிறைவேற்றப்பட்டதன் மூலம் இன்றுவரை நாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றோம். ஊழல் மோசடிகள் மேற்கொள்ளப்பட்டன. மத சார்பான பிரச்சினைகள் தூண்டிவிடப்பட்டன. தவறு இழைத்தவர்களுக்கு மேற்படி சட்டத்தின் ஊடாக பாதுகாப்பு வழங்கப்பட்டது.
எனவே 18க்கு வாக்களித்தமை தொடர்பில் இன்று மனம் வருந்துகின்றேன்.