Tuesday, 28 April 2015

சார்ல்ஸ், டயனாவின் ரகசிய மகள்..! புதிய சர்ச்சை..??


Dajana 01

பிரித்தானிய அரச குடும்பத்தை பற்றி அறியாதவர் இல்லையெனலாம். குறிப்பாக சார்ல்ஸ், டயனா தம்பதியினரை பற்றி எழுதாத ஊடகங்கள் இல்லை எனக் கூறலாம்.
அவர்களது வாழ்வைப் பற்றிய நிஜ சம்பவங்களும், வதந்திகளும் பல ஊடகங்களின் முதற்பக்கத்தை அலங்கரித்துள்ளன.
சார்ல்ஸ், டயனா தம்பதியினருக்கு வில்லியம்ஸ் , ஹரி என இரு புதல்வர்கள் இருப்பதை நாம் அறிவோம்.
ஆனால் இவர்களுக்கு மேலதிகமாக இருவருக்கும் ஒரு பிள்ளை உள்ளதாக அமெரிக்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது வெளிச் சோதனை முறை கருக்கட்டல்மூலமாக இக் குழந்தை பிறந்த தாகவும் , அக் குழந்தை தற்போது பெரியவளாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் அப் பெண்ணுக்கு 33 வயது எனவும் அண்மையில் அங்கு விஜயம் செய்த கேட் மிடில்டன் அவரை சந்தித்த தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
டயனா 18 வயதாக இருக்கும்போது அவரது கருமுட்டை , இளவரசர் சார்ல்ஸின் விந்துடன் சேர்க்கப்பட்டு இப்பரிசோதனை நட த்தப்பட்டுள்ளது. அவர்களது திருமணத்துக்கு முன்னே இது இடம்பெற்றுள்ளது.
அரசவாரிசை பிரசவிக்கக் கூடிய தகுதியை டயனா கொண்டுள்ளாரா என மருத்துவ ரீதியாக நிரூபிக்கும் பொருட்டே இச்சோதனை நட த்தப்பட்டுள்ளது.
இச்சோதனை நிறைவடைந்த தன் பின்னர் அந்தக் கருவை அழித்து விடும்படி உத்தரவிடப்பட்டுள்ள போதிலும் பரிசோதனையை மேற்கொண்ட வைத்தியர் அதனை செய்யவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
மாறாக அவர் அக்கருவில் ஒன்றை தனது மனைவிக்கு செலுத்தி குழந்தையை பிரசவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கிலாந்து அரச குடும்பம் தொடர்பில் பல சர்ச்சைக்குரிய தகவல்களை ஏற்கனவே வெளியிட்டுள்ள அமெரிக்க ஊடகங்கள் இம்முறையும் இத்தகைய பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளது.

Dajana

Loading...