வெசாக் காலக்கட்டத்தில் விற்பனை செய்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 30 ஆயிரம் பௌத்த கொடிகளை புறக்கோட்டையில் உள்ள இரண்டு வர்த்தக நிலையங்களிலிருந்து கைப்பற்றியுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. இந்த இரண்டு வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்களுக்கு எதிராக அடுத்த வாரத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் அதிகார சபை அறிவித்துள்ளது.