கண்டியில் பிரபல வர்த்தகரான டி.ஜே.குமாரகே கதிர்காமம் ஆலயத்தின் 11 வது பஸ்நாயக்க நிலமேவாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பஸ்நாயக்க நிலமேவுக்கான தேர்தல் இன்று (28) மொனராகலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அதன்போது டி.ஜே.குமாரகே போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவரின் பெயரை கொட போவ நிலமே சரத் நிலமே பிரேரிக்க கிரிவெஹர நிலமே சிரிதிலக ஆமோதித்திருந்தார்.
இதற்கு முன்னர் குறித்த பதவியில் முன்னாள் ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
