Friday, 24 April 2015

மருத்துவ தாவரங்கள்





கற்பூரவல்− (எ) ஓமவல்−
  கற்பூரவல்லி இலைச் சாறு 5 மில்லி, நல்லெண்ணெய் 5 மில்லி, கொஞ்சம் சர்க்கரை மூன்றையும் நன்றாக கலந்து பெரியவர்களுக்கு 2 தேக்கரண்டி, சிறியவர்களுக்கு 1 தேக்கரண்டி. 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 1/2 தேக்கரண்டி கொடுக்க சளிகரைந்து வெளியாகும், இருமல் குணமாகும்.
  கற்பூரவல்லி இலைச்சாறுக்கு சமமாக தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி தலைவலிக்கு தடவ வலி குறைந்து குணம் தரும். காதுவலிக்கு ஒரு சொட்டு விட காது வலியும் நீங்கும்.
  1அல்லது 2 கற்பூரவல்லி இலையைச் சிதைத்து 150 மில்லி நீரில் போட்டு அத்துடன் 1 தேக்கரண்டி சோம்பு சேர்த்து காய்ச்சி அத்துடன் பனைவெல்லம் சேர்த்துக் காய்ச்சி 100 மில்லியாக சுண்டிய நீரை குடிக்க வயிற்று உப்புசம் நீங்கும். வயிற்றில் உள்ள வாயுத்தொல்லை குணமாகும்.
துளசி
  பசும்பாலுடன் சில துளசி இலைகளைப் போட்டுக் காய்ச்சி குழந்தைகளுக்குக் கொடுத்தால் குழந்தைகளை நோய் அணுகாது.
  துளசி இலையுடன் இஞ்சித் துண்டையும் சேர்த்து மென்று தின்று சுடுநீர் குடித்தால் சளியும், சளியினால் மூக்கில் ஏற்படும் புண்ணும் குணமாகும். 
  துளசியுடன் சுக்கைத் தட்டிப் போட்டு கஷாயம் வைத்து குடித்து வந்தால் ஜுரம் நீங்கும்.
  மூன்று நாள்கள் துளசி கஷாயத்துடன் இஞ்சி, தேன் கலந்து சாப்பிட்டால் காய்ச்சல் அடியோடு மறையும்.
Loading...