![]() |
| Journalist - Siddeque Kariyapper |
விசேடமாக, இலங்கை அரசியலில் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் அவைகள் விட்டுக் கொண்டிருக்கும் தவறுகள் மற்றும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், முஸ்லிம் பிரதேச அபிவிருத்திகளை எவ்வாறெல்லாம் முன்னெடுக்க முடியுமென்ற தங்களது ஆலோசனைகள் என பல விடயங்களை இந்த அமைப்பு சுட்டி நிற்கிறது.
இந்த அமைப்பு தங்களுக்கான இணையம் மற்றும் பிற இணையங்கள் ஊடாகத் தங்களது கருத்துகளை முன்வைத்து வருகிறது. இந்த அமைப்பின் பிரதான தளம் கட்டாரில் செயற்படுகிறது. இதன் தலைவராக மொஹிடீன் பாவா அவர்கள் செயற்படுகிறார்கள். அவர் ஒரு சிறந்த தொழில்சார் நிபுணர் என அறிய முடிகிறது. சர்வதேச ரீதியில் வர்த்தகத் துறையில் நெருக்கமான தொடர்பைக் கொண்டவர் என்றும் தெரிய வருகிறது.
இந்த அமைப்பு தொடர்பில் ஆரம்பத்தில் நான் நல்ல அபிப்பிராயம் கொண்டவனாக இருக்கவில்லை. வெறும் அரசியல் நோக்கங் கொண்ட ஓர் அமைப்பாகவும் பத்தோடு பதினொன்றுதான் இதுவும் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால், அண்மைக் காலமாக அந்த அமைப்பு தொடர்பில் எனக்கு நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது. அவர்களால் முன்வைக்கப்படும் பல திட்டங்கள் என்னைக் கவர்ந்தன. விசேடமாக, முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் பொருளாதார வலுவூட்டும் திட்டங்கள் போன்றன மிகவும் காத்திரமானதாக காணப்படுகின்றன. அவற்றினைச் செயற்படுத்தும் போது பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியுமென நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.
அத்துடன் இவர்களது நடவடிக்கை தொடர்பில் நான் சில புலனாய்வுகளை மேற்கொண்ட போது அவர்கள் அரசியலுக்காகவே இவ்வாறெல்லாம் செய்கிறார்கள் என நான் முன்னர் கொண்டிருந்த நிலைப்பாடு தவறானது என்பதனைப் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
கட்டார் நாட்டை தளமாக கொண்டு இலங்கையர்களால் இயக்கப்படும் இந்த அமைப்பு இலங்கையின் பல பாகங்களிலும் வாழும் முஸ்லிம்களுக்கு மிகவும் இரகசியமான முறையில் பல உதவிகளைச் செய்துள்ளதனை நான் அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. விசேடமாக, தனி நபர் தேவைகள் தவிர்ந்த பொதுச் சேவைகளை இவர்கள் முக்கிய தேவைகளாக நினைத்து பல்வேறு உதவிகள் செய்துள்ளமையை அறிந்து புல்லரித்துப் போனேன். சின்னதொரு உதவியை செய்து விட்டு பெரிதாக அறிக்கை விட்டு விளம்பரம் தேடிக் கொள்ளும் முட்டையிடும் பெட்டைக் கோழிகளுக்கு ஒப்பான அமைப்புகள் மத்தியில் பெரிதாகச் சேவைகளைச் செய்து விட்டு ஆமையாக அடை காக்கும் இவர்களது பணி பாராட்டுக்குரியது.
கல்முனை, மருதமுனையைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் பௌதீக வளங்கள் தொடர்பில் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சிக்கு அண்மையில் சுட்டிக் காட்டப்பட்டமை தொடர்பில் ஓர் ஆவணம் என் கைக்குக் கிட்டியது. குறித்த பாடசாலையில் தொழில்நுட்ப வசதியை மேம்படுத்தும் நோக்கில் கணிணிகள் வழங்கி உதவுமாறு இந்தக் கட்சியிடம் கூட்டிக் காட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து அவர்கள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பலனாக 100 கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். கட்டார் நாட்டின் சமூக சேவை அமைப்பு ஒன்றின் ஊடாக பெறப்பட்டுள்ள இந்தக் கணினிகளை குறித்த பாடசாலைக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகள் இடம்பெறுவதனையும் என்னால் ஊர்ஜிதப்படுத்த முடிந்தது.
இவர்களின் இவ்வாறான பணி சிறக்க வேண்டுமென வாழ்த்துகிறேன். உள்ளுர் அரசியல்வாதிகளினால் முடியாத பல பாரிய பணிகளை முன்னெடுத்துள்ளனர் என்பதும் தெரிய வருகிறது.
மேலும், உள்ளுர் அரிசியல்வாதிகளிடையே பொதுநலம் என்று வரும் போது அதில் ஒன்பது நமக்கு ஒன்றுதான் மக்களுக்கு என்ற சுயநலம் கலந்து விடுகிறது. ஆனால், இவர்களிடம் பத்தும் பொது நலனுக்கே என்ற கொள்கை பளிச்சிடுவது பெருமையான விடயமாகவுள்ளது.
இளைஞர்களை இலக்கு வைத்தும் எதிர்காலச் சமூகத்தின் நலன் கருதியும் இவர்கள் முன்னெடுக்கும் பணிகள் வாழட்டும்! அவர்கள் ஆளட்டும் மக்கள் நலனை!!
ஏ.எச்.சித்தீக் காரியப்பர் +Siddeque Kariyapper

