

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கும் நடவடிக்கையை கைவிடுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை தொடர்கின்றது.பாராளுமன்றம் நேற்று முற்பகல் கூடியபோது முன்னாள் ஜனாதிபதி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் ஐ.ம.சு.மு. வின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
முன்னாள் ஜனாதிபதி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட மாட்டார் என எழுத்து மூலம் வாக்குறுதி வழங்குமாறு கோரி 50 க்கும் மேற்பட்ட ஐ.ம.சு.மு. வின் பாராளுமன்ற உறுப்பினரகள் நேற்று முற்பகல் வேளையில் பாராளுமன்றத்திற்குள் எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
தற்போதும் 40 இற்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குள்ளேயே எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்ந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரவு முழுவதும் பாராளுமன்றத்திற்குள் இருந்து எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டமை இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : Virakesari
