நேபாள் தலைநகர் காத்மண்டுவில் லலித்பூர் பகுதியில் கட்டிடங்கள் இடிந்து கிடக்கும் காட்சி. ரிக்டர் அளவுகோலில் 7.9 நிலநடுக்கம் ஏற்பட்டது. | படம்: ஏ.எஃப்.பி.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் வங்கதேசத்திலும் உணரப்பட்டது. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் முயற்சியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக 40 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
நேபாள பூகம்பத்தின் தாக்கத்தினால் வங்கதேசத்தில் உள்ள பல்கலைக் கழக கட்டிடம் ஒன்றில் விரிசல்கள் ஏற்பட்டன.
ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகிய நேபாள பயங்கர நிலநடுக்கத்தின் விளைவாக வங்கதேச தலைநகர் டாக்கா உட்பட பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின.
இதில் மக்கள் ஆங்காங்கே பீதியில் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறினர்.
டாக்காவில் மட்டும் சுமார் 70,000 பலவீனமான கட்டிடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
