Wednesday, 29 April 2015

நிலநடுக்கத்தால் இடிபாடுகளுக்குள் சிக்கி சிறுநீரைக் குடித்து உயிர்வாழ்ந்த வாலிபர் மீட்பு




காத்மாண்டு: நேபாள நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்கு சிக்கிய வாலிபர் தனது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக சிறுநீரை குடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிஷி கனால் என்ற 27 வயது வாலிபர் கடந்த சனிக்கிழமையன்று காத்மாண்டுவில் உள்ள ஓட்டல் ஒன்றில் மதிய உணவு அருந்திவிட்டு 2வது மாடிக்கு சென்றார். அப்போது தான் அந்நாட்டையே புரட்டியெடுத்த நிலநடுக்கம் நிகழ்ந்தது. இந்த நிலநடுக்கத்தில் ரிஷி உணவருந்திய ஓட்டலும் தரை மட்டமானதால், ரிஷியின் கால்கள் முற்றிலுமாக இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டன. எப்படியாவது தன்னை யாரும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் ரிஷி காலத்தை கடத்திக்கொண்டிருந்த நிலையில் 82 மணி நேரத்துக்கு பின் நேற்று அவர் பிரெஞ்சு மீட்பு குழுவினரால் உயிருடன் மீட்கப்பட்டார்.

இது குறித்து ரிஷி கூறுகையில், 'எந்த சத்தமும் இத்தனை நாட்களாக கேட்காத நிலையில், உயிர் வாழ்வதற்காக 82 மணி நேரத்தில் பல முறை, எனது சிறுநீரையே குடித்துக்கொண்டிருந்தேன். இவ்வாறு சிறுநீரை அருந்தி நேற்று முன்தினம் வரை யாராவது என்னை காப்பாற்றி விடுவார்கள் என்று நம்பிக்கொண்டிருந்த நிலையில் நேற்று அந்த நம்பிக்கையை இழக்க நேரிட்டது. எனது நகங்கள் அனைத்தும் வெள்ளையாக மாறியதுடன், உதடுகளிலும் வெடிப்பு ஏற்பட்டது.

எனக்கருகே பல சடலங்கள் கிடந்த நிலையில், துர்நாற்றமும் வீசியது. என்னை காப்பாற்ற யாரும் வரப்போவது இல்லை என்று தோன்றியதுடன், நானும் மரணமடைவது நிச்சயம் என்று பயந்துக்கொண்டிருந்தேன். இந்நிலையில் நேற்று காலை எனது அபயக்குரலை கேட்ட சிலர் உதவ முன்வந்தார்கள். அவர்களின் துரித முயற்சியால் நான் உயிர் பிழைத்தேன் என்று சோகம் கலந்த கண்ணீருடன் கூறினார்.
Loading...
  • இலங்கை நிர்வாக சேவைக்கு ஆளனியினை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன (தவறவிடாதீர்)20.01.2016 - Comments Disabled
  •                 கவிதை                   வாய்களை மூடியதால் காயங்களை சுமந்தோம்19.06.2015 - Comments Disabled
  • Prophet Muhammad & His Message11.12.2015 - Comments Disabled
  • லண்டனில் பள்ளிக்கூட பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த 6 ஆசிய நாட்டவர்கள்09.09.2015 - Comments Disabled
  • தனியார் துறையினரின் சம்பள உயர்வுக்கு அமைச்சரவை அங்கீகாரம்24.12.2015 - Comments Disabled