கனடா- முன்னாள் ரொறொன்ரோ பொலிஸ் மா அதிபர் பிளயர் லிபரல் கட்சி சார்பில் ஸ்காபுரோ தென்மேற்கு பகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் செய்தி ஞாயிற்றுகிழமை காலை புதிதாக உருவாக்கப் பட்ட ஒரு ருவிட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளயர் ரொறொன்ரோ பொலிஸ் மா அதிபராக கடந்த 10-வருடங்களாக கடமையாற்றி தற்சமயம் இளைப்பாறி உள்ளார். தொடர்ந்தும் பொது சேவை செய்வற்கு ஸ்காபுரோ தென்மேற்கு பகுதி மக்களின் ஆதரவை பெறுவதற்காக ஆவலாய் இருப்பதாக தெரிவித்துள்ளார். தற்சமயம் இத்தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக என்டிபி பாராளுமன்ற உறுப்பினர் டான் ஹரிஸ் உள்ளார். ஆனால் கருத்துக்கள் ஆராய்ச்சி மூலம் பிப்ரவரியில் நடாத்தப்பட்ட ஒரு கருத்து கணிப்பில் 557-வாக்காளரின் கருத்தின் பிரகாரம் பதிலளித்தவர்களில் 39 சதவிகிதமானவர்கள் பிளயருக்கு வாக்களிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. ஹரிசிற்கு 29-சதவிகிதமும் கொன்சவேட்டிவ வேட்பாளர் 27-சத விகிதத்தையும் பெற்றிருந்தனர். ஞாயிற்றுகிழமை பிற்பகல் நடைபெறவுள்ள கல்சா தின அணிவகுப்பில் ஒரு வேட்பாளராக பொது மேடையில் தோன்றுவார்.
