Wednesday, 22 April 2015

பஷிலுக்கு விளக்க மறியல்

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் சற்று நேரத்திற்கு முன் உத்தரவிட்டதைத்
தொடர்ந்து, நாடெங்கும் பட்டாசு கொளுத்தப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நிதிக் குற்றத்தடுப்பு  பிரிவினரால் கைது செய்யப்பட்ட பஷில் கடுவெல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் பிணைக்கு முயற்சித்து அவ்வாய்ப்பு நழுவியதாக தெரிவிக்கப்படுகிறது.
கையகப்படுத்தப்பட்டது பொது மக்களின் நிதியென்பதால் பஷிலுக்கு பிணை மறுக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக அங்கிருந்து வந்த செய்திகள் தெரிவித்திருந்தன.

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் 70 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பான விசாரணைக்காக அவர் இன்று நிதி குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை 11.00 தொடக்கம் பிற்பகல் 5.00 மணிவரை அவரிடம் விசாரணை மேற்கொண்டதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடன், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ரக் ரணவக்க ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.(ரி)

நன்றி : Daily Ceylon
Loading...