ஈராக்கின் குர்திஷ்களது சுயாட்சிக்கு உட்பட்ட வடக்கு ஈராக்கில் ISIS போராளிகளுக்கும் குர்திஷ் பிராந்திய அரச படையினருக்கும் இடையில் கடும் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. ஈராக்கின் மத்திய அரச படையினரும் குர்திஷ் படைகளோடு இணைந்துள்ளதாக ஈராக் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ஒபாமாவின் அமெரிக்க இராணுவம் ஆகாய வழியாக இனங்காணப்பட்ட ISIS போராளிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. தரைவழிப் படையினருக்கு ஆதரவாகவே அமெரிக்க விமானப் படை களத்தில் இறக்கப்பட் டுள்ளதாக ஒபாமா கூறி வருகிறார். கடந்த இரு வாரங்களாக அமெரிக்கா மட்டுப்படுத்தப்பட்ட ஆகாய வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை கவனிப்புக்குரியது.
தைகிரிஸ் நதியின் மௌசூல் அணையை போராளிகளிடமிருந்து மீளக் கைப்பற்றியுள்ளதாக ஈராக், குர்திஷ் படையினர் அறிவித்துள்ளனர். கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக சிரியாவில் போராடி வந்த ஆயுதப் படையொன்று திடீரென ஈராக்கை நோக்கித் திரும்பி இஸ்லாமிய நாட்டை உருவாக்கும் படையென்று தம்மை அறிமுகம் செய்து ஈராக்கின் நகரங்களை ஒன்றன் பின் ஒன்றாக ஆக்கிரமித்து வந்தது.
ஒரு கட்டத்தில் அதன் தலைவர் அபூபக்கர் பக்தாதி ஈராக்கிற்கும் சிரியாவுக்கும் இடைப்பட்ட பிராந்தியத்தில் இஸ்லாமிய கிலாபத்தை பிரகடனம் செய்து, தானே உலக முஸ்லிம்களின் தலைவர் எனவும் அறிவித்தார். இப்போது ISIS இன் தாக்குதல் வீரியம் குறைந்துள்ளதோடு, சில இடங்களில் அது முற்றாகத் தோற்கடிக்கப்பட்டும் வருகின்றது.
ISIS ஒரு இஸ்லாமிய அமைப்பு எனும் கருத்து பலரிடையே நிலவுகின்றபோதும், அது அமெரிக்கத் திட்டத்தின் (US Project) ஒரு பகுதி என்பது தற்போது தெளிவாகி வருகின்றது. தொடக்கத்தில் ஷீஆப் படையினரை அவர்கள் கொன்ற விதம் YouTube இல் பதிவேற்றம் செய்யப்பட்டு உலகம் முழுவதும் இஸ்லாமிய போராட்டம் குறித்த ஓர் உருக் குலைந்த விம்பத்தை உருவாக்கியது. இப்போது யஸ்திகள் எனப்படும் ஒரு பிரிவினரை மதமாற்றத்திற்கு நிர்ப்பந்திப்பதாக சர்வதேச ஊடகங்கள் தொடர்ச்சியாகப் பேசி வருகின்றன.
அதேபோன்று ஈராக்கில் வாழும் சிறுபான்மை கிறிஸ்தவ மக்களை மதமாற்றத்திற்கு நிர்ப்பந்திப்பதாகவும், மறுப்பவர்கள் பெருமளவில் கொல்லப்படுவதாகவும் உலக ஊடகங்கள் கதை பரப்பி வருகின்றன. இது உண்மையென்றால் ISIS இயக்கம் இஸ்லாமிய பின்னணியுடன் கூடிய ஒரு அமைப்பல்ல எனும் எமது வாதம் மேலும் பலமடைகின்றது.
உண்மையில் அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தில் நீண்டகாலம் பணியாற்றி, அதிலிருந்து விலகிய நிலையில் அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் இரகசியங்களை, குறிப்பாக அமெரிக்க மத்திய உளவு ஸ்தாபனமான CIA வுடன் இணைந்து தேசிய பாதுகாப்பு நிறுவனம் மேற்கொண்டு வரும் அழிவு நடவடிக்கைகளை தோலுரித்து வரும் ஸ்னோடன், அபூ பக்கர் பக்தாதி குறித்து தெரிவித்துள்ள தகவல் மிகுந்த ஆச்சரியத்திற்குரியதல்ல.
தான் அறிந்த வகையில் ISIS இன் தலைவர் அபூபக்கர் பக்தாதி, இஸ்ரேலின் உளவுத் துறையான மொஸாத் மற்றும் அமெரிக்க மத்திய உளவு நிறுவனத்தினால் இராணுவ ரீதியில் பயிற்று விக்கப்பட்டவர். மத்திய கிழக்கில் அமெரிக்கா நடைமுறைப்படுத்தி வரும் ஒரு இராணுவ அரசியல் திட்டத்தின் முகவராக அவரும் அவரைச் சார்ந்தோரும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
ஸ்னோடனின் இந்தக் கருத்து இப்போது வெளிவந்துள்ள போதும் ஆரம்பத்திலேயே இவ்வியக்கத்தின் பின்னணியில் அமெரிக்கத் திட்டம் உள்ளதை நாம் வெளிப்படுத்தி வந்தோம்.
மதீனாவில் இஸ்லாமிய கிலாபத்தை உருவாக்கிய இறை தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வாழ்ந்த சிறுபான்மையினரான யூதர்களோடும் கிறிஸ்தவர்க ளோடும் அரசியல் ஒப்பந்தங்களை மேற்கொண்டு, அவர்களது முழு அரசியல், கலாசார உரிமைகளையும் உறுதி செய்தார்கள். ஆர்மேனியாவில் கிறிஸ்தவர்களோடு முஆவியா (றழி) அரசியல் ஒப்பந்தங்களை மேற்கொண்டார். அதன் மூலம் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இன்று கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதாகக் கூறப்படும் ஈராக்கில் நஜ்ரான் பிரதேச கிறிஸ்தவர்களோடு இறை தூதர் (ஸல்) அவர்கள் ஒப்பந்தங்களில் ஈடுபட்டதோடு, அவர்களது முழு உரிமைகளையும் உறுதி செய்தார்கள். வரலாறு இப்படி இருக்கையில், இஸ்லாத்தின் பெயரால் கிலாபத்தை உருவாக்கப் போவதாகக் கூச்சலிடும் ISIS அமைப்பு யஸ்திகளையும் கிறிஸ்தவர்களையும் ஏன் கொலை செய்ய வேண்டும்?
இஸ்லாமிய சமூகத்திற்குள்ளேயே பாரிய மோதல்களை நீண்ட காலத்திற்கு நீடிக்கச் செய்வதன் மூலம் ஒருங்கிணைந்த இஸ்லாமிய உலகத்தை சிதைப்பதும் அந்த சிதைவுகளிடையே தமது எண்ணெய் மற்றும் அரசியல் நலன்களை அடைவதுமே அமெரிக்காவின் திட்டமாகும். அதற்காகவே ISIS கிலாபத் என்ற பெயரில் களத்தில் இறக்கப்பட்டது.
நன்றி Rauf Zain