Friday, 1 May 2015

கோத்தா பொதுபல சேனா கட்சியின் தலைவரா ??

Gota

பொதுபல சேனா கட்சியின் தலைவராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்சவை நியமிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கை அரசியல் கட்சிகளின் வரிசையில் இணைந்து கொள்ளும் முயற்சிகளை பொதுபல சேனா மேற்கொண்டு வருகின்றது.

தமதுகொள்கைகளுக்கு முரண்படாத வகையில் புதிய அரசியல் சக்தியொன்றை நிர்மானிக்கப் போவதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் பிரவாகத்திற்குள் புதிய அரசியல் தலைவர் ஒருவரை சமூகத்திற்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சிங்கள பௌத்தர்கள் என சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் மிகவும் அறுவருக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

எனினும் உத்தியோகப் பற்றற்ற ரீதியிலான தகவல்களின் அடிப்படையில் பொதுபல சேனாவின் தலைவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும் 19ம் திருத்தச் சட்ட அமுலாக்கத்தின் பின்னர் இரட்டைக் குடியுரிமைக்கொண்ட கோதபாய ராஜபக்சவினால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks JVP News


Loading...