
இன்று இயக்குனர் லிங்குசாமி அவர்களை கொழும்பு ஹில்டனில் சந்தித்தேன்.மிகவும் அரிதான அருமையான சந்திப்பு.என்வாழ்வில் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கான முக்கியமான சந்திப்பும்கூட.
அவர் இயக்குனர், தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி சிறந்த ஹைகூ கவிஞர். நல்ல மனிதர்.பழகுவதற்கு இவ்வளவு எளிமையானவராக இருப்பாரா என்பதை நான் சிறிதளவும் எதிர்பார்க்கவில்லை.அவரது ஹைக்கூ கவிதை போல மிகவும் மென்மையானவாராக எனக்கு அவர் தெரிந்தார்.

ஆனந்த விகடனில் அவர் தொடராக எழுதிய ஹைக்கூ கவிதைகளை ஆனந்தவிடகன் பதிப்பகம் 'லிங்கூ' என்ற பெயரிலே நூலாக வெளியிட்டுள்ளது. கவிஞர் அறிவுமதி, கலாப்பிரியா, அப்துல்ரஹ்மான், கல்யாண்ஜி மற்றும் பல முக்கியமான கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகளை பேசும்போது நினைவுகூர்ந்து பேசினார்.அவரது நினைவாற்றல் ஹைக்கூ கவிதையிலே உள்ள அவரது ஈடுபாட்டை துல்லியமாக எடுத்துக்காட்டியது.
இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக இருந்து 'ஆனந்தம் என்ற வெற்றி படத்தின் மூலம் மூலம் தமிழ் திரை உலகில் கால்பதித்தவர் இயக்குனர் லிங்குசாமி. இன்று வெற்றிபெற்ற பாடலாசிரியராக தமிழ் ரசிகர்களை தன் பாடல்களால் கட்டிப்போட்டிருக்கும் கவிஞர் யுகபாரதி அவர்களை 'பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்' என்ற பாடலினூடாக ஆனந்தம் படத்தில் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தியவர் நமது இயக்குனர்.
ரன், ஜி, சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை, அஞ்சான் போன்ற படங்களை இயக்கியுள்ளார். திருப்பதி பிரதர்ஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல படங்களை தயாரித்துள்ளார். இவ்வாண்டு 'உத்தம வில்லன்' வெளிவந்துள்ளது.அடுத்து ரஜினி முருகன் திரைப்படம் வெளிவரவுள்ளது.

'ஒரு கல்லூரியின் கதை திரைப்படத்தின் ஊடாக திரைத்துறையில் கால்பதித்த இயக்குனரும் நடிகருமான நண்பர் நந்தா பெரியசாமி அவர்கள்தான் எமது இந்த சந்திப்புக்கு பாலமாக நின்றவர்.அவர் இல்லையென்றால் இந்த சந்திப்பு எனக்கு சாத்தியமற்று போயிருக்கும் அவருக்கு என் வாழ்நாள் நன்றிகள்.
அவரது இயக்கத்தில் வெளிவரவுள்ள 'ஜிகினா' திரைப்படம் திருப்பதி பிரதர்ஸ் ஊடாக இவ்வாண்டு வெளிவரவுள்ளது.இயக்குனர் நந்தா பெரியசாமி அவர்களின் கனவுகள் இத்திரைப்படத்தின் ஊடாக வெற்றிபெற மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.
இயக்குனரோடு இலக்கியம், சினிமா குறித்து நீண்ட நேரம் மனசு விட்டு பேச வாய்ப்புக்கிடைத்தது.எனது குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட எனது 'தட்டாதே திறந்து கிடந்து கிடக்கிறது' கவிதை கேட்டுவிட்டு இரண்டு இயக்குனரும் சிலாகித்து பேசினார்கள்.
இறுதியாக நான் விடைபெறும்போது மலேசியாவில் கவிக்கோ அப்துல்ரஹ்மான் தலைமையில் நான் பாடிய கவியரங்கு கவிதை, 'தட்டாதே திறந்து கிடக்கிறது' கவிதை தன்னை மிகவும் பாதித்தாக குறிப்பிட்டார்.கடந்த மாதம் இயக்குனர் ஏ.வெங்கடேஸ் அவர்களை சந்தித்தித்போது அவருக்கும் இந்த கவிதை மிகவும் பிடித்திருப்பதாக குறிப்பிட்டார்.என்பதும் குறிப்பிடத்தக்கது
எனது பாம்புகளின் குளிக்கும் நதி கவிதை நூலை அவருக்கு கையளித்தேன்.இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விசால் நடித்து வெற்றி பெற்ற 'சண்டைக்கோழி' பாகம் 2 திரைப்படமாகப்போகிறது.மற்றுமொரு மகிழ்ச்சியான செய்திக்காக நானும் காத்திருக்கிறேன்..
