திவிநெகும திணைக்களத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் உள்ளிட்ட நால்வர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜயதிலக மற்றும் திவிநெகும திணைக்கள பணிப்பாளர், சாரதி ஆகியோர் இன்று கடுவெல நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர்.
அவர்களை எதிர்வரும் 7ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் தம்மிக்க ஹேமபால இன்று (05) உத்தரவிட்டார்.
பசில் ராஜபக்ஸ கடுவெல நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டார் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, கடுவெல நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருநது பசில் ராஜபக்ஸ, நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் பெசில் ராஜபக்ஸவை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
கடந்த 22ம் திகதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர், கடுவெல நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.
பசில் ராஜபக்ஸவை இன்றைய தினம் வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு கடந்த 23ம் திகதி கடுவெல நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகும் பசிலின் சட்டத்தரணிகள், அவருக்கு பிணை வழங்குமாறு நீதவானிடம் கோர உள்ளனர்.
