Tuesday, 5 May 2015

மஹிந்த ராஜபக்ஸ நிபந்தனை


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நிபந்தனை விதித்துள்ளார்.


இரண்டு நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே சந்திப்பு நடத்த முடியும் என மஹிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.


தேசிய அரசாங்கம் அமைக்கக் கூடாது எனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடாக அரசாங்கம் அமைக்க வேண்டுமெனவும் மஹிந்த ராஜபக்ஸ கோரியுள்ளார்.


இந்த நிபந்தனைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்ளத் தவறினால் சந்திப்பு நடத்தப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஸ கோரியுள்ளதாக முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.


இந்த நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் போது முழு அளவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கப்படும் என மஹிந்த உறுதியளித்துள்ளார்.


எவ்வாறெனினும், முழுப் பாராளுமன்றமே ஒரு அரசாங்கமாக செயற்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Loading...