Sunday, 31 May 2015

தமிழர்களுக்கு உதவ இலங்கை அரசுக்கு விருப்பமில்லை முதல்வர் சி.வி விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் | கோப்பு படம்
தமிழர்களுக்கு உதவ இலங்கை அரசுக்கு விருப்பமில்லை என்று இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.
“அரசின் இந்த விருப்ப மின்மை, இலங்கையில் பல் லாண்டுகளாக காணப்படும் ஒரு போக்கின் தொடர்ச்சிதான்” என்று அவர் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
“இலங்கை அரசுக்கு சர்வதேச அளவில் நிர்ப்பந்தம் தருவது அவசியம். சிறுபான்மையினர் பிரச்சினைகளை வெளியுலகினர் அறியும்படி செய்தால் மட்டுமே அவர்களுக்காக இலங்கை அரசு ஏதாவது செய்யும். வடக்கு மாகாணத்தில் வளமான நிலங் களை ராணுவம் இன்னும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத் துள்ளது. வளமற்ற நிலங்களை மட்டும்தான் விடுவித்துள்ளது” என்றும் அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...