இலங்கை ஜனநாயக சோகலிசச் குடியரசின் தேசியக் கொடியின் தவறான பாவனையினைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்ததல் மற்றும் அதற்குரிய கௌரவத்தினை உண்டு பண்ணுதல் ஆகிய நோக்கத்தை முன்னிறுத்தி உள்நாட்டலுவல்கள் அமைச்சு முன்மொழிந்த யோசனையை ஏற்று விழாக்களின் போது அரசும் பொதுமக்கள் தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படட விசேட அலங்காரக் கொடியை வடிவமைப்பதற்கு குழு ஒன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது பற்றிய அமைச்சரவைத் தீர்மானம் வருமாறு:- 1986 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் அமைச்சரவையினால் அனுமதிக்கப்பட்ட தேசியக் கொடி பாவனைக்கான விதிக்கோவையில் விதித்துரைக்கப்பட்ட ஒழுங்கு விதிகளுக்கு எதிராக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தேசியக் கொடி பாவிக்கப்படும் ஒரு போக்கு அவதானிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் இலங்கை கட்டளைகள் விபரக் குறிப்புக்களுடன் ஒத்திசையாத தேசியக் கொடிகள் தயாரிக்கப்பட்டு பல்வேறுபட்ட நிகழ்வுகளில் பாவிக்கப்பட்டுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடியின் தவறான பாவனையினைத் தடுப்பதற்கென அரசு அதேபோல பொதுமக்கள் இரு தரப்பினருமே வைபவங்களில் பாவிப்பதற்கு ஏதுவாக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்படக் கூடிய ஓர் அலங்காரக் கொடியை அறிமுகம் செய்வதற்கு குழுவொன்றை அமைக்க உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ ஜோசப் மைக்கல் பெரேராவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
