Tuesday, 26 May 2015

பாலியல் வன்கொடுமை தீர…

மனோஷா

மிகக் கீழ்நிலையில் நல்லுணர்வுகளைக் கொண்ட சாதாரண மனிதர்களைக் Rape.-1கூட ஆத்திரம் கொள்ள வைத்திருக்கிறது வித்தியாவின் பாலியல் வன்கொடுமைக் கொலை. பாலியல் வல்லுறவு அல்லது பாலியல் வன்புணர்ச்சி என்ற சொற்பதம் இதற்கு பொருந்தாது என்றே நினைக்கிறேன்.
பெண் உடல் போகத்திற்காகவும் ஆண் உடல் உழைப்பதற்காகவும் உருவாக்கப்பட்டதாகவே அநேகா ; நம்புகிறார்கள். அத்தகைய எண்ணத்தை தாங்கி நிற்கும் இந்த சமூகத்தில் பெரும்பாலான பெண்கள் நாள்தோறும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுகிறார்கள். உயர் பதவிகளில் உள்ளவர்களால் அலுவலகங்களில் பாலியல் சுரண்டலை ,; பொது இடங்களில் பாலியல் தொல்லை என சட்டத்தின் கதவைத் தொடமுடியாத குற்றங்களால ; நாள்தோறும் பெண்கள் துன்பப்படுகிறார்கள்.
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதன் மூலம் இத்தகைய கொடுமைகளைத் தடுத்துவிடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஏற்கனவே மரண தண்டனைகள் எமது தமிழ்சமூகத்தில் வழங்கப்பட்டிருக்கின்றன. மிகவும் அண்மைக் காலங்களில் அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இறப்பிற்கு முன்னர் (2009 மே ) இலங்கையின் வட மாகாணத்தில் அவர்களின் அரசியல் எதிரிகளுக்கும் சமூகக் குற்றம் புரிபவர்களுக்கும் மரண தண்டனை வழங்கி வந்திருக்கிறது அந்த அமைப்பு.
திருடர்களுக்கும் கூட மரண தண்டனை நிறைவேற்றியிருக்கிறார்கள். புலிகளின் தண்டனை பற்றிய விமர்சனம் அல்ல இது. அவ்வாறான சட்டத்தின் கீழ் வாழ்ந்தவர்கள் ஏன் மனம் திருந்தியவர்களாக இல்லை. வன்னி உட்பட வடக்கில் இன்று அதே தமிழர்கள் சமூகச் சீரழிவுகளிலும் கொடூரமான செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். சிறந்த கலை கலாசார செயற்பாடுகளாலும் கல்வி அறிவினாலும் வளர்ந்த நிலையில் இருக்க வேண்டிய ஒரு சமூகம் எவ்வாறு வன்கொடுமை மனநிலை வளர இடம் கொடுக்கிறது?
யுத்தம் விட்டுச் சென்ற கொடுமையில் ஒன்று பல்லாயிரக் கணக்கில் ஆண் துணையின்றிப்போன பெண்களின் அவல நிலைமை. அவர்கள் தமது குடும்பத்தை தனித்தே தாங்கி நிற்கிறார்கள். பொருளாதார ரீதியாக அவர்கள் தமது வாழ்வை கொண்டு நடத்த சிரமப்படுகிறார்கள். பாலியல் தீயாக அச்சதத் pற்கும் அவமானத்திற்கும் உட்படுகிறார்கள். உண்மையில் பாலியல் உயிர்கள் அனைத்திற்கும் பொதுவான உணர்வாயினும் மனிதனே அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருக்கிறான். மனித இனம் கல்வியால், சிந்தனையால், அன்புணர்வால் எதிர்கால சந்ததி பற்றிய அக்கறையால் வளர்ச்சி கண்டிருக்கிறது. படிப்படியாக வந்த வளர்ச்சி இன்று தறிகெட்டு ஓடுகிறது. ஆண்களுக்காக மட்டுமல்ல இலாபத்தை குறிக்கோளாகக் கொண்ட வர்த்தக சந்தைக்காகவும் பெண்கள் போகப் பொருளாக்கப்பட்டுள்ளார்கள். பலவீனர்களாக்கப்பட்டுள்ளார்கள். உலக வர்த்தக சந்தையிலிருந்து வீடு வரை அதற்கான அமைப்புமுறை செயற்படுத்தப்படுகிறது.
பெரிய உல்லாச விடுதிகள், பணக்காரர்களின் ஆடம்பர மாளிகைளை அலங்கரித்த அரைநிர்வாண பெண் சிலைகள் கலை வடிவங்கள் என்று சான்றுப்படுத்தப்பட்டன. ஆலயங்களில் வணங்குவதற்காய் அமைக்கப்பட்ட பெண் சிலைகள் இப்போது திருமண மண்டபங்களின் வாசல்கள், விடுதிகள் உட்பட வீடுகளின் மதில் மேல் கூட அமர்ந்திருந்து வரவேற்கின்றன. அரைகுறை ஆடையுடன் வரவேற்கும் பெண் ; சிலைகள் தமிழர் கலாசாரத்தை பறைசாற்றுகிறதாம்.
தமிழர் கலாசாரம் பெண்களைப் போற்றுகிறது. அதேநேரம் பெண்களைப் போகப்பொருளாய் பயன்படுத்துகிறது. நல்லதொரு குடும்பத்தை பேணுவதற்காக எமது சந்ததியை பெருமைப்படும ; தமிழினமாய் விட்டுச் செல்வதற்காக நாம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் விழிப்புணர்வு பெற வேண்டும். கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம், கல்வி, சமயம,; தொழில் அனைத்திலும் பெண்களை அவமதிக்கும் பக்கங்கள் அகற்றப்பட வேண்டும்.
சட்டங்கள் வலுவாக்கப்பட வேண்டும். பாலியல் வன்கொடுமைக் குற்றம், சிறுவர் துர்ப்பிரயோகம், போதைப் பொருள் கடத்தல், சினிமா போன்ற ஊடகங்களைப் பாவித்து பாலியல் குற்றத்தைத் தூண்டுதல ; போன்ற மோசமான குற்றங்களுக்கு “பிணை வழங்காது வாழ்நாள் சிறை” தண்டனை வழங்க வேண்டும். பாலியல் வக்கிரங்களைத் தாங்கிவரும் இணையத்தளஙக்ளை அரசாங்கம் தடை செய்ய வேண்டும்.
பொலிஸ் நிலையங்கள் அனைத்திலும் பெண்கள் சிறுவர்களுக்கான துரித செயற்பாட்டு பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். அதேநேரம் குற்றத்தை நிரூபிப்பதற்கான நவீன பொறிமுறையுடன் விசாரணைப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் பண பலமும் ஆட் பலமும் கொண்ட செல்வாக்குமிக்க நபர்களின் குற்றங்கள் நிரூபிக்கபப் டாமல் போயிருக்கிறது என்பதே பெரும் அவலம்.
Loading...