அமைச்சர் றிசாட் பதியுதீனின் அத்துமீறிய செயல்களுக்கு எதிராக அதியுச்ச நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தப் போவதாக சிறிலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டக்கல்லூரி மாணவர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
மன்னார் பெரியமடு பிரதேசம் உள்ளிட்ட மன்னார் மற்றும் வவுனியாவின் பல பகுதிகளில் றிசாட் பதியுதீன் பலவந்தமாக தமக்கு ஆதரவான முஸ்லிம்களை குடியேற்று வருகிறார்.
இது தொடர்பான அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு ஊடகங்களும் இந்த விடயத்துக்கு எதிரான செய்திகளை முன்கொண்டு செல்கின்றன.
இந்த நிலையிலேயே ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
