
Naavuk Arasan
பின்பற்றும்
ஆணிவேரை ஆழமாக்கி
கால்ப் பரப்பில்
வீரியத்தை
உறிஞ்சிக்கொண்டு
புரட்சிகரமாகக்
கிளை பரப்பிய
இலைகளில்
பிரதிபலித்துக்கொண்டு
இருட்டின பிறகும்
அலட்சியமாகவே
எழுந்து நின்றது
இளந்தாரி
மரம் ...
மூச்சுவிடக்
கஷ்டமான
ஒரு
மண் அரிக்கும்
மழை நாளில்
வயோதிபத்துக்கு
எதிராக எழுந்து
தனித்தன்மையைப்
புறக்கணித்துவிட்டு
கும்பிடு போட்டு
வளைந்து போன
முதுகெலும்பை
நிமிர்த்த விரும்பாமல்
பக்க வேர்களுக்கும்
வலிக்காமல்
வீரமாக
விழுந்து போனது
பழைய
மரம்.

.