சீனா தனது எல்லைகளுக்கு அப்பாலும் தனது இராணுவ வல்லமையை விரிவுபடுத்தும் புதிய திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
வெறுமனே தனது சொந்த கரையோர எல்லையை பாதுகாப்பதை விட பெரும் கடற்பரப்புகளிலும் சீனாவின் கடற்படை கூடுதல் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.
சீனா தனது கடற்படையின் வல்லமையை வேகமாக அதிகரித்துவருகின்ற நிலைமை பிராந்தியத்திலுள்ள பல நாடுகள் எச்சரிக்கையடைய வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு சீனக் கடலில் சர்ச்சைக்குரிய தீவுக்கூட்டங்கள் உள்ள பகுதியில் 50 மீட்டர் உயரமான இரண்டு வெளிச்சவீடுகளை அமைக்கவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
ஆனால், இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்துமாறு அமெரிக்கா கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
