Wednesday, 27 May 2015

நரம்புகள் வரம்புகள் மீறித் துடிக்கட்டும்

மேற்கே விதைத்த சூரியனே
உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம் 
தோன்றிட ஏதும் தடையிருந்தால்
உன்னை தோண்டி எடுக்கவே துணிந்து விட்டோம்
இடர் நீங்கவே வந்த இருள் போக்கவே 
கையில் ஒளிசாட்டை எடுத்தால் என்ன 
விஸ்வ ரூபம் கொண்டு விண்ணை இடிப்போம் நண்பா 
சில விண்மீன்கள் விழுந்தால் என்ன 
மின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை 
கைவாளாய் எடுத்து இன்னல் தீர இன்னல் தீர
போராட்டம் நடத்து
கூட்டுப்புழு கட்டிக்கொண்ட கூடு கல்லறைகள் அல்ல 
சில பொழுது போனால் சிறகு வரும் மெல்ல 
ரெக்கை கட்டி ரெக்கை கட்டி வாடா வானம் உண்டு வெல்ல 
வண்ணச்சிறகின் முன்னே வானம் பெரிதல்ல
இதயம் துணிந்து எழுந்த பின்னாலே 
இமயமலை உந்தன் இடுப்புக்கு கீழே 
நரம்புகள் வரம்புகள் மீறித் துடிக்கட்டும் 
விரல்களில் எரிமலை ஒன்று வெடிக்கட்டும் 
முட்டுங்கள் திறக்கும் என்னும் புது பைபிள் கேட்கட்டும்
சின்ன சின்ன தீக்குச்சிகள் சேர்ப்போம் 
தீ வளர்த்துப் பார்ப்போம் 
விடியல் வரும் முன்னே இருள் எதற்கு கொள்வோம் 
குட்டு பட்டு குட்டு பட்டு கூட்டம் குனிந்த கதை போதும் 
பொறுமை மீறும் போது புழுவும் புலியாகும் 
தீயின் புதல்வர்கள் உறங்குதல் முறையா
சிங்கத்தின் மீசையில் சிலந்தியின் வலையா 
புஜத்திலே வலுத்தவர் ஒன்றாய் திரட்டுவோம் 
நிஜத்திலே பூமியை முட்டி புரட்டுவோம்
வறுமைக்கு பிறந்த கூட்டம் வையத்தை ஆளட்டும்
-பொன்.ரங்கன்
Loading...
  • புனிதமிக்க பள்ளிவாசல்கள்  அரசியல் கேளிக்கை கூடமா? சட்டம் மூலம் இதை நிறுத்த வேண்டும்.09.08.2015 - Comments Disabled
  • Can Sri Lanka Be Better Off With An Achchāru Government?25.06.2015 - Comments Disabled
  • டக்ளஸ் தேவானந்தாவின் அறக்கட்டளைக்கு எதிராகப் புகார்16.06.2015 - Comments Disabled
  • Damac removes Trump image, name from $6bn Dubai project 12.12.2015 - Comments Disabled
  • வடமாகாண அதிபர்கள் இடமாற்றம் இரத்து17.07.2015 - Comments Disabled