
கலைமகள் ஹிதயா ரிஸ்வி
தாயின் கருவறைகுள்ளேயிருந்தே
இன்னொரு
பிறப்பு....,
வளர்ப்பு ...,
இறப்பு ...,!
தாய்மையின் பிரசவம்
மண்ணறையின் இருளினை
காண்பித்துக் கொண்டிருக்கிறது. !
பிஞ்சுக்கால்கள் உதைக்கும் போதே
சுவாசமாய் வருகின்றது மூச்சு !
அன்பு நெஞ்சில்
சிறு துளி பாசம் உரசும் போதே
பற்றினை வடிக்கும்
வியர்வை துளி வடிந்து
உடம்பை கழுவிக் கொண்டிருக்கிறது. !
தொப்புள் கொடி உறவுகளென்று
ஒட்டிக் கொள்வதற்குள்
அடம்பன் கொடியாய் சிக்கிக் கொள்கின்றது
வாழ்க்கை !
அன்னை ஆயிஷா நாயகியும்
அன்னை பாத்திமா நாயகியும் தந்த
அழகிய வாழ்க்கை வரலாற்றினைக் கூட ,
பொத்தி பிடிக்க முடியாமல்
காற்றில் பறக்கும் தூசுகளாக்கி விடுவதா ?
தென்றல் தடவும்
ஒரு சுகந்தமான உள்ளத்து உணர்வில்
வாசம் நுகர்ந்து
உயிர் சுவாசித்துக் கொண்டிருக்கிறது.
வாழ்ந்து காட்டுவதை விட ,
வாழ முடியாமல் தவிப்போருக்கு
திசை காட்டுவதே
நமக்கு வேண்டியகடமையுணர்வு !
இங்கு -
அன்பான அரவணைப்பும்
ஆழமான பாசமும் .
நேர்மையான வழி காட்டலும்
அழகியவாழ்க்கை வரலாறும்
அதோ
அல்லாஹ்வினால் படைக்கப்படாமல், இறக்கப்பட்ட,
அருள் மறை திருமறை( அல் -குர்ஆன் )
அழகாய் விபரித்து (விளக்கம்) சொல்லிக் கொண்டிருக்கிறது.!

