கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் நடாத்திய மாகாணமட்ட விளையாட்டுப் போட்டியின் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் முதலிடம் பெற்று மாகாண சாம்பியனான சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி கிரிக்கட் அணியினர் இன்று வியாழக்கிழமை பாரிய ஊர்வலமொன்றை சம்மாந்துறையில் நடாத்தினர்.
நேற்றுமுன்தினம் கிண்ணியா அல்இர்பான் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற மாகாணமட்ட கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் கல்முனை சாஹிறா தேசிய கல்லூரியுடன் மோதி சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி கிரிக்கட் அணி வெற்றியீட்டியுள்ளது. மொத்தமாக 32 பாடசாலை அணிகள் பங்குபற்றின.
ஊர்வலத்தின் போது சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனைக்குச் சென்ற அணியினரை வரவேற்ற வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் இந்த வெற்றியைப் பாராட்டி வாழ்த்துரைப்பதையும் உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் எ.முஸ்ரக்அலி மற்றும் விளையாட்டாசிரியர்கள் அலுவலக ஊழியர்கள் நிற்பதையும் காணலாம்.
படங்கள்: காரைதீவு நிருபர்-
