Saturday, 23 May 2015

திக்கற்று நிற்கும் தமது சமூகத்துக்காக ஓங்கி ஒலித்த அமைச்சர் ரிஷாத்

 

21.05.2015 நடுநிசியில் ஹிரு திரையினை கண் விழித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்... ஆனால் அதன் பின்னர் எனக்கு கண்மூடியும் உறக்கமில்லை.
சிங்கள மினிஸ்சுண்ட இடம் ஒனவானம் ஒனதரமட்ட ரத்தரன் ஒப்பு.
அவுருது விசிபஹக் துக்வின்தலா தமங்கே இடமட்ட யன மினிஸ்சுண்ட
யகட ஒப்புவத் லபாதென்னே நே. எய்? -
“சிங்கள மக்களுக்கு காணி வேண்டுமென்றால் ‪#‎பொன்ஒப்பு‬ ( உரித்து) ஆனால் இருபத்தைந்து வருடம் துன்பப்பட்டு தங்களின் இடங்களுக்கு செல்லும் மக்களுக்கு இரும்பு ஒப்பாவது கொடுப்பதில்லை. ஏன்?” – கலாநிதி நௌபல்
அனைவருக்கும் புத்தியில் படும்படியாக தொடுத்த வினா இது. இதுதான் எனது தூக்கத்தை நிறுத்தி “ பலய” நிகழ்ச்சியில் திளைத்திருக்கச் செய்தது.
இங்கு இடம்பெற்ற உரையாடல்களின் தொகுப்பு / சாராம்சம் இதுதான்...
வழக்கமாக “‪#‎வில்பத்துவைகாப்போம்‬” என்ற கோசத்தில் இருந்து வந்த முஸ்லிம் மீழ்குடியேற்ற எதிர்ப்புவாதமானது இந்நிகழ்வு ஆரம்பித்ததும் கலாநிதி நௌபல் அவர்களால் வில்பத்து வனத்திலே எவ்வித காடழிப்பும் இடம்பெறவில்லை என்ற தெளிவுபடுத்தளின் பின்னர் “ வில்பத்துக்கு ஆபத்து இல்லை கல்லாறு ஒதுக்கு நிலத்தின்மீதே ( KALLARU RESERVATION LAND) காடழிப்பு மற்றும் அத்துமீறல் இடம்பெறுவதாக தலைப்பு திருப்பப்பட்டது.
அமைச்சர் கௌரவ.‪#‎ரிசாத்‬ அவர்கள் இரண்டாம் மொழி பேசும் ஒருத்தருக்கேயான அம்சங்களுடன் பேச்சுச்சிங்களத்தில் தனித்த சிங்கமாக தமது தரப்பு நியாத்தை தெட்டத்தெளிவாக ஆதாரத்துடன் எடுத்துவைத்தார். என்னை பொருத்தமட்டில் அஷ்ரப் சேருக்கு பிறகு ஒரு சமுகத்திற்காக தனித்து நின்று கவலைப்படும் மனிதராக நான் இரவு அமைச்சர். ரிசாத் அவர்களை கண்டேன். முஸ்லிம்களுக்காக பேசுவதற்கு சரளமாக சிங்களம் தெரிந்த இதய சுத்தியுள்ள முஸ்லிம் ஒருத்தரும் இல்லை என்று வெட்கமும் கொண்டேன். மொழி குறைபாடாக இருந்தும், தான் நாட்டுக்கு சொல்லவந்த விடயங்களை அவர் சொல்லிமுடித்துவிட்டது எனக்கு பெருமூச்சை தந்தது.
நிகழ்வில் ஏட்டறிவு பூர்வமாக ஆதாரங்களை அடுக்கிய சகோதர இனத்தை சார்ந்த எதிர்தரப்புவாத சுற்றாடல் நிபுனர் திரு. சுஜீவ, இலங்கையின் காணி, சுற்றாடல் சட்டங்கள் எதை சொல்கிறதோ அவற்றை ஒப்புவித்தார். உண்மையில் அவரின் ஆதாரங்கள் சட்டரீதியான காணி பற்றிய ஒருத்தருக்கு அரசகாணி வழங்கும்போது பின்பற்றப்பட வேண்டிய ஏற்பாடுகள்தான். ஆனால் அவை யாவும் வில்பத்து பிரதேச பிணக்குடன் ஒப்பீட்டு பார்ப்பது சூழ்நிலை பொருத்தமில்லை. இக்காணி பிரச்சினை பூர்வீகமானது.
சகோ.‪#‎சுஜீவ‬ வில்பத்து பகுதியில் காடழிப்பு இடம்பெறவில்லைதான் என்றுதான் நாங்கள் சொல்கிறோம் ஆனால் கல்லாறு பகுதியை உள்ளடக்கிய ஒதுக்கு நிலப்பகுதிகள் ( reservation land - ரக்ஹ்சித இடம் ) மற்றும் அதனை அண்டிய காடுகள் பெரும்பாலும் அழிக்கப்படுவதாக சுட்டிக்காட்டினார். இதன்போது EIA ( ENVIRONMENT IMPACT ASSESMENT - சுற்றாடல் மதிப்பீட்டறிக்கை) உட்பட நான்கு விதமான ஏற்பாடுகளுக்கு முரனாக குறித்த மீள்குடியமர்த்தல் இடம்பெறுவதாக வாதிட்டார்.
ஏட்டறிவுப்படி பார்த்தால் அவை சரியாகவே படும். ஆனால் இலங்கை பூராக காடழிப்பு, கரையோர கட்டுமானம், ஏன் கடலுக்குள்ளும் கட்டுமானங்கள் இன்றும் இடம்பெற்றே வருகின்றன. ஆனால் அவற்றுக்கு தேவைப்படாத சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கை (Environment IMPACT assessment ) ஒரு குறித்த இனம் தங்களுடைய பூர்வீக காணிகளிலே குடியேறும்போது மட்டும் வேண்டப்படுவதா?
25 வருடங்களின் பின்னர் குடியிருப்புக்காணிகள் சனநடமாட்டம் இல்லாது போனால் காடாகிப்போவது இயற்கை. இதனை சுத்தம் செய்து மீளக்குடியமர முயல்வது இயற்கை காடழிப்பாகுமா? இச்சிக்கல் நிலைமைகளுக்காக விசேட செயலணிகள் ஏற்படுத்தப்பட்டு காணியதிகாரங்களோடு தொடர்புடைய அரச அமைச்சர்கள் உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட செயலணிகள் , குழுக்கள் சேர்ந்து பல்வேறு ஆய்வறிக்கைகளுக்கு பின்னர் மீளாய்வுகளையும் மேற்கொண்டு காணிக்கச்சேரிகளூடாக வழங்கப்பட்ட காணிகள் எவ்வாறு அத்துமீறலாகும்? அதனை முன்னின்று செயற்படுத்துவது எவ்வாறு அதிகார துஸ்பிரயோகமாகும்?
கொழும்பில் இருந்து கொண்டு GPS satellite system ஊடாக நிலஅளவை செய்யப்பட்டு எதுவித அடையாளக்கற்களும் இடப்படாது பிரதேச செயலாளரின் சிபாரிசின்றி 2012 இலே அவசரமாக ஏற்படுத்தப்பட்ட வர்த்தமான அறிவித்தலை மட்டும் வைத்துக்கொண்டு வாதிடுகின்றீர்களே. நிரந்தர காணிச்சட்ட முறைமகளின்படி காணியுரித்துக்கள் வழங்கப்பட்டபின்னரும் ஒரு அல்லல்பட்ட சமுகத்தை வாழவிடாது அப்புறப்படுத்த முனைவது ஏற்புடையதா? குடியிருப்புக்களை குறிக்கும் பல காணித்துண்டுகளை (LOTS) கொண்ட பகுதிகளை GPS வரைபின்படி காடுகள் என குறிக்கப்பட்டுள்ளதற்கு மக்கள் பொறுப்பாக முடியாது என்று அமைச்சர் உறுதி செய்ததுடன் 1940 களில் வழங்கப்பட்ட பிரித்தானிய முடியின் ஆளுனர்களின் ஒப்பமிடப்பட்ட காணி உரித்துக்களையும் காண்பித்தார்,
முறையற்ற காடழிப்புக்கள் இடம்பெறும் போதுகூட தலையிடாத மதகுருக்களும் அரசியல் கட்சிகளும் தன்னார்வ இயக்கங்களும் இதில் மட்டும் தலையிடுவதும் அதற்காக ஊடக தர்மங்களையும் மீறி சிங்கள ஊடகங்களோடு தமிழ் ஊடகம் ஒன்றும் இதனை பூதாகரமாக்கி தனிமத சேறுபூசும் நடவடிக்கையில் இறங்கியுள்ளமை வேதனைக்குரியது என்றார் அமைச்சர் கௌரவ ரிசாத் பதியுதீன்.
அத்துடன் “ மேற்படி வனவிலங்கு இலாகாக்களுக்கு உட்பட்டதாக கூறப்படும் வில்பத்து காணியின் விஸ்தீரன எல்லை 25 வருடங்களுக்கு பின்னர் குடியிருப்புக்காணிகளின் எல்லைகளையும் உள்ளடக்கியதாக GPS மூலம் உள்வாங்கப்பட்டு எல்லை விரிவாக்கப்படுத்தப்பட்டுள்ளமை அப்பாவி மக்களின் தவறாகாது. அது அதிகாரிகளின் தவறு. அவர்கள் இரண்டு மணிநேரத்துக்குள் வெளியாகி 25 வருடங்களுக்கு பின்னர் திரும்பிச்சென்று காடுகளை துப்பரவு செய்யும்போது நீங்கள் அண்மைக்காலங்களில் ஏற்படுத்திக்கொண்ட வர்த்தமான அறிவித்தல்கள் மூலம் இப்பூர்வீக நிலங்களை பாதுகாப்பு நிலமாக விழுங்கிகொள்வதும் இம்மக்களை வாழவிடாது பல்வேறு தரப்பினரும் அச்சுறுத்திவருவதும் இனவாத ஒடுக்குமுறை என்ற கோணத்திலேயே மக்கள் பார்க்கின்றனர்” என்ற அர்த்தத்தில் அமைச்சர் தனது கருத்தை கூறினார்.
இனியும் இதுபற்றி அலட்டிக்கொள்வோருக்கு நான் ஒரு சவால் விடுக்கின்றேன் “ நீதிமன்றிற்கு இவ்விடயத்தை கொண்டுசென்று இடம்பெற்றதாக கூறப்படும் அதிகார துஸ்பிரயோகங்கள் , குற்றச்செயல்களை நிரூபித்துக்காட்டுங்கள்” என்று பகிரங்க சவால் ஒன்றையும் விடுத்தார். இந்த சவாலின் தைரியப் பின்னணி என்னவென்றால் எது எவ்வாறு இருப்பினும் குறித்த மீள்குடியேற்றம் சகல தரப்பு சட்டமுறை ஆவனங்களையும் பெற்று உரிய செயன்முறையிலேயே முன்னெடுக்கப்படுகின்றது என்பதேயாகும். இதனை பொதுமதியினர் புரிந்திகொண்டிருப்பர். எழுத்துக்களை மட்டுமே பார்த்து நிஜங்களை நிராகரிக்கும் ஒருபக்க மூளைகள் இதை பிரச்சினைப்படுத்திக்கொண்டேதான் இருக்கும்.
உண்மையில் ஒரு அநீதியிழைக்கப்பட்ட சமுகத்திற்காக தனித்து நின்று போராடும் சிட்டிசனாகவே அவரை நான் காண்கிறேன். அவர் பாடுபடுவதை கல்நெஞ்சம் கூட நேற்றிரவு கவலையோடு பார்த்திருக்கும்.
‪#‎கலாநிதி‬ நௌபல் ( புவியியல்துறை) இதுபற்றி வாதிடும்போது... சில விடயங்களில் பிரச்சினைகள் இருப்பினும் இலங்கையின் துறைமுக தீவுத்திட்டம் ( FORT CITY) மற்றும் ஏனைய கரையோர சுற்றுலா கட்டுமானங்களுக்கு அவசியமாக கருதப்படும் சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கை செய்யப்படுகிறதா? என எதிர்வாதிகளிடம் வினவினார். வில்பத்து பிரச்சினைகளுக்குள்ளாகியுள்ள மக்களின் காணிகள் வனப்பாதுகாப்பு எல்லைக்குட்படவில்லை. என அமைதியாக அடக்கமாக எடுத்துரைத்தார். பெரும்பான்மை மக்களுக்கென குடியேற்றங்கள் இடம்பெறும்போது விசேட ஆதிக்கங்களின் கீழ் காடழிப்புக்கள் செய்யப்பட்டு பொன்னாலான ஒப்புக்கள் வழங்கப்படும்போது ஏனிந்த அப்பாவிகளுக்கு தமக்கேயுரிய இடங்களில் வாழ்வதற்கு தகட்டு ஒப்புக்கள் கூட இல்லை. ஏன் ? என வினவினார்.
மனிதாபிமானங்கள் சட்டங்களை விஞ்சும். ஆனால் சட்டங்கள் கையிலெடுக்கப்பட்டால் மனிதாபிமானங்கள் சாகும் என்பதே இவருக்கு எதிர்த்தரப்பினரால் வழங்கப்பட்ட பதில்களிலிருந்து நான் கண்டுகொண்டது.
தொலைபேசியூடாக கேள்விகளை தொடுத்த நபர்கள்... வில்பத்து பகுதியிலே குடியிருப்புக்காணிகளிலே மக்கள் தமது சொந்த நிலத்தை சுத்தம் செய்யும்போது வளர்ந்துவிட்ட காடுகளை துப்பரவாக்குவதை காடழிப்பு என வாதிடும் நீங்கள் குறித்த பகுதியையொட்டியதாகவும் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள சிங்கள குடியேற்றங்களின்போதும் அபிவிருத்திப்பணிகளின்போதும் பல்லாயிரம் ஹெக்டேயர் காடுகளும் அரிதான இயற்கை வளங்களும் நிர்மூலமாக்கப்ப்படும்போது தலையிடாத நீங்கள் இதில்மட்டும் அதீத சிரத்தை எடுப்பதன் நோக்கம் என்ன? என கேள்வியெழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஜே.வி.பி யின் கௌரவ. ‪#‎லால்காந்த‬ தனது வாதத்தின்போது... முன்னைய அரசாங்கத்தில் இவற்றினை சென்று பார்வையிடக்கூட அனுமதியில்லாதபோது... எவ்வாறு தலையிடுவது? இன்றைய நல்லாட்சியில் இப்பிரச்சினையை ஆரம்பமாகவைத்து அனைத்து முறைகேடுகளிலும் நாம் தலையிட எண்ணியுள்ளோம் என்றார். காடழிப்புக்கள் தொடர்பிலேதான் நாம் கவனம் செலுத்துகிறோமே தவிர இது முஸ்லிம் சிங்கள தமிழ் பிரச்சினை இல்லை. இது தேசிய பிரச்சினை. ஆனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படுகின்ற நீதியானது நிலையானதாகவும் சட்டமீறல்கள் அற்றதாகவும் இருக்க வேண்டும் என்றார். முக்கியமாக குறித்த பிரச்சினையுடன் தொடர்புபட்ட மக்களின் பக்கம் நியாயம் உள்ளது என்பதை ஒப்புக்கொண்ட போதும் இடம்பெறும் மீள்குடியமர்த்தல் செயற்பாடுகளில் முறைகேடுகள் உள்ளதை வலியுறுத்தியே நின்றார். மேலும் இது தேசிய பிரச்சினையாகவே பார்க்கப்பட வேண்டுமே தவிர முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கையாக பார்க்கப்பட கூடாது என்றார்.
இருந்தாலும் இவரின் தனிப்பட்ட வாதத்திறனை இம்மேடையில் இவர் காட்ட முனையாது ஓரளவு உடன்பாட்டு அணுகுமுறையை கையாண்டார். இம்மக்களுக்கு காணிகள் வழங்குவதை ஆதரித்த ஜே.வி.பி இனவாதத்திற்கு எதிரானது என்று அமைச்சர் ரிசார்ட் பதியுதீன் அவர்களும் இங்கு சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
‪#‎சாராம்சம்‬ காணி , சூழல் போன்றவற்றுக்காக ஏற்படுத்தப்பட்ட சட்டங்களின் அசல்களை பின்பற்றியே அரச காணிகள் வழங்கப்படல் வேண்டும். ஆனாலும் இம்மக்களின் தனியார் காணிகளுடன் சேர்த்து அரச காணிகளில் வாழ்ந்த மக்களின் காணிகளும் வில்பத்து வனப்பகுதிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளமையை இங்கு அவதானிக்கலாம். எனவே குறித்த உள்வாங்கல் செயற்பாடானது சரியான முறைமைகள் , கள செயற்பாட்டு அடிப்படைகள் , படித்தரங்களினூடாக செய்யப்படாமல் GPS முறைமையூடாக செய்யப்பட்டுள்ளது.
எனவே பிழையான முறைமையாக்களிளிருந்து அல்லல்படும் மக்களுக்கு நியாயம் வழங்கும்போது சகல வர்த்தமான அறிவித்தல்கள், காணி சட்டங்கள், ஏற்பாடுகளையும் பார்ப்பது சந்தர்ப்பவாதமும் ஒருபக்க சார்பானதுமாகும். இப்பிரச்சினையை தீர்க்கவே விசேட செயலணிகள் மற்றும் அதிகாரமிக்க குழுக்களினூடாக படிமுறை படிமுறையாக அங்கீகாரங்கள் வழங்கப்பட்டு சீரிய வழிகளில் சகல சட்ட ஆவனங்களும் பெறப்பட்ட இம்மீள்குடியேற்ற செயற்பாடு நீதியானதும் வலுவானதுமாகும்.
சட்டங்களை புரட்டி வாசிப்பதால் வில்பத்துவை புரிந்துகொள்ள முடியாது. வழக்காறுகள், மனு நீதிகள் மறுக்கப்பட்டு எழுத்துச்சட்டங்கள் மட்டுமே பின்பற்றப்படும் தேசமாக என்றுமே இலங்கை திகழ்ந்திருந்தால் இன்று ரிசார்ட் போன்றவர்கள் தனித்துநின்று மன்றாட வேண்டிஇருந்திருக்காது. ஒரு இனத்தை விரட்ட இன்னுமோரினத்தின் வாகனத்தொடரணிகள் வில்பத்துவை வளம்வந்திருக்கவும் தேவையில்லை.
நம்முடைய கருத்தாக சொன்னால்... உரிய நிலங்களுக்கு உரிமை தேடும்போது காணப்பட்ட தடைகளை கௌரவ ரிசாத் தனது முறையான முயற்சியால் நீக்கிக் கொடுத்திருக்கின்றார். சில காணி விதிமுறைகளுக்கு அப்பாலான விடயங்கள் இம்மீழ்குடியேற்றத்தில் இடம்பெற்றிருந்தாலும் அது மனிதாபிமான அடிப்படையில் சகல அரச உயர்மட்டமும் இணைந்து சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்ட திட்டமாகும். இது தோற்குமென்றால் அது இனவாதமாக மட்டுமே இருக்கலாம். வேறெந்த சட்டமுமாக இருக்காது.


- அல் அமீன் ஏறாவூர்
Loading...