சாய்ந்தமருது தோணாவின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்று சாய்ந்தமருது தோணாவில் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை நீரில் மூழ்கியது.
நீரில் முழ்கிய வான் கல்முனை மாநகர சபையின் கனரக வாகனத்தின் உதவியுடன் பிரதேசவாசிகளால் வெளியே மீட்டெடுக்கப்பட்டது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களால் தோணா அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீரில் முழ்கிய வான் ரக வாகனத்தை கல்முனை மாநகரசபையின் கனரக வாகனத்தின் உதவியுடன் பிரதேசவாசிகள் வெளியே எடுத்தனர்.
குறித்த சாய்ந்தமருது தோணாவில் ஆட்களை மறைக்கும் அளவுக்கு சல்பீனியா வளர்ந்துள்ளதாலும் சரியான பாதுகாப்பு வேலி இல்லாததாலும் இப்பிராந்தியத்தை அச்சுறுத்தும் அளவுக்கு தோணா அமைந்துள்ளது.
காரைதீவு நிருபர்-
நன்றி - தமிழ் சீ என் என்
