நேபாளத்தில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது, ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகி உள்ளது.
நேபாளத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்திற்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியானார்கள்.
பலர் வீடுகளையும், உடமைகளையும் இழந்து வீதிக்கு வந்தனர். அந்த சோகம் அடங்குவதற்குள் கடந்த 12 ஆம் தேதி நிகழ்ந்த நிலநடுக்கத்திலும் இதுவரை சுமார் 125 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், நேபாளத்தில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது, ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது.
அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து மேற்காக 157 கி.மீ தொலைவில் உள்ள பரத்பூர் அருகே இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை
நன்றி - தமிழ் சீ என் என்