Thursday, 14 May 2015

ராணுவ அமைச்சரான ஹியூன் யோங் சோல் க அயர்ந்து தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது அவருக்கு மரணதண்டனை




சியோல்: வட கொரியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த கிம் ஜாங்-இன் மறைவுக்குப் பின், அந்த நாட்டின் அதிபராக அவரது மகன் கிம் ஜாங் உன் கடந்த 2011 ஆம் ஆண்டு பதவியேற்றார். கிம் ஜாங் இன் அரசில் ராணுவ அமைச்சராக பதவி வகித்து வந்தவர் ஹியூன் யோங் சோல்(66). இவர் கடந்த மாத இறுதியில் அதிபர் கிம் ஜாங் இன் தலைமையில் நடந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, ராணுவ அமைச்சரான ஹியூன் யோங் சோல் கண் அயர்ந்து தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. 

மேலும், கடந்த மாதம் மாஸ்கோ நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டபோது அவர், அதிபர் கிம் ஜாங் இன்னை பகிரங்கமாக விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஹியூன் யோங் சோல் மீது தேசத்துக்கு துரோகம் செய்துவிட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால், அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும்படி உத்தரவிடப்பட்டது. வடகொரிய தலைநகர் பியாங்க்யாங்க் நகரில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. 

Loading...