Sunday, 31 May 2015

தமிழர்களிடம் இலங்கை தொடர்ந்து மனித உரிமைகளை மீறுகிறது


- ஓக்லாண்ட் இன்ஸ்ட்டிட்யூட் அறிக்கை
இலங்கையில் போர் முடிந்து 6 ஆண்டுகள் ஆனபின்னரும் தமிழர்களிடம் மனித உரிமைகள் மீறப்படுகிறது  வெளியிட்டு உள்ளது.
இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் 2009–ம் ஆண்டு உச்சக்கட்டslarmy jaffna போர் நடைபெற்றது. மே 18–ந்தேதி அன்று போர் முடிவுக்கு வந்தது. இதில் விடுதலைப்புலிகள் படை தலைவர் பிரபாகரன் உள்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ராஜபக்சே ஆட்சியில் ராணுவ கெடுபிடி காரணமாக  தமிழர்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகினர். இந்நிலையில் இலங்கையில் போர் முடிந்து 6 ஆண்டுகள் ஆனபின்னரும் தமிழர்களிடம் மனித உரிமைகள் மீறப்படுகிறது ஓக்லாண்ட் இன்ஸ்ட்டிட்யூட் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
இலங்கையில் தமிழர் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது மனித உரிமை மீறல்களை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழர் நிலங்களில் இராணுவ குடியிருப்புகள் மற்றும் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. இலங்கையில் 2009-ம் ஆண்டு போர் முடிந்த பின்னர், முதல் முறையாக இலங்கையின் மனித உரிமை நிலைப்பாடு குறித்து இந்த சுயாதீன அறிக்கையை ஓக்லாண்ட் இன்ஸ்ட்டிட்யூட் வெளியிட்டு உள்ளது. தமிழர்கள் பகுதியில் பெரும்பாலும் சிங்கள ராணுவ வீரர்களே நிறுத்தப்பட்டு உள்ளனர் என்றும் 6 தமிழர்களுக்கு ஒரு ராணுவ வீரர்கள் என்ற கணக்கில் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இலங்கை ராணுவம் பெரிய அளவிலான சொத்துகளை பெற்று வருகிறது, ஆடம்பர சுற்றுலா ஓய்வகங்கள் மற்றும் வணிக கட்டிடங்களை நிர்வகித்து வருகிறது. இவையனைத்தும் அப்பகுதியை சேர்ந்த மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டவை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தங்களது சொந்த மண்ணிலே, ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இடமின்றி தவித்து வருகின்றனர் என்ற தகவலும் அறிக்கையில் தெளிவு படுத்தப்பட்டு உள்ளது.
“வெற்றி நினைவுச் சின்னங்கள் கட்டுவதற்கு தமிழர்களின் பண்பாடு மற்றும் வரலாறு தொடர்ந்து அரசாங்கத்தின் தலைமையில் ஒடுக்கப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.”  என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இலங்கை அரசு வாக்குறுதிகள் அளித்த பின்னரும், போருக்கு பின்னர் காணமல் போன தமிழர்கள் நிலை புதிராகவே உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் சுமார் 70 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அதற்கும் அதிகமான மக்கள் காணாமல் போயிருக்கலாம் என்று கணிக்கப்பட்டது.
அனுராதா மித்தாலால் அங்கீகாரம் செய்யப்பட்டு உள்ள 39 பக்கங்கள் அடங்கி அறிக்கையானது, ஓக்லாண்ட் இன்ஸ்ட்டிட்யூட் மையத்தினால் 2014-ம் ஆண்டு ஜனவரி முதல் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள், நூற்றுக்கணக்கான நேர்காணல்களையும் உள்ளடக்கியதாகும். 
Loading...