Saturday, 16 May 2015

பள்ளத்தை நோக்கி பாய்ந்து



பள்ளத்தை நோக்கி பாய்ந்து
சென்ற நதி நான்...
வெள்ளத்தை நிறுத்த 
வீரர்கள் அணை கட்டிய போது 
பாதை மாறி கல்லுள் 
மோதுண்டு பயணித்த போது 
விதி என்றனர்..!
நானோ சதி என்று 
பின்னர் அறிந்த போது 
சற்றே விலகினேன்...
இன்று மீண்டும் 
பச்சை பசேல் என்ற 
வயல் வெளி ஊடாக 
பயணிக்க ஆயத்தமாகி..

  *******முனீரா அபூபக்கர்*************
Loading...