Saturday, 16 May 2015

முடிவின் ஆரம்பம்



உன்..
வாழ்க்கையின் வா்ணங்களை

கடத்திச் சென்ற...
கனவுகளை மன்னித்து விடு.
புாிந்துகொள்..
சிறகுகளுக்கு..
பாதை தேவையில்லை..
உன்..
முடிவின் ஆரம்பம்
வெயிலுக்கும்...
காய்ச்சல் வரவேண்டும்.
சஹாரா பாலைவனம்--உனக்கு
ஒருபக்கம்தான்..
பூமியை உள்ளங்கையில்..
வைக்க--உன்னிடம்
ஆயுதம் உள்ளது.
பெண்ணே...
சாய்ந்து கொள்ள
தோள்கள் தேவையில்லை.
நிமிா்ந்து நிற்க
கால்கள் உள்ளதே...



 .......பாத்திமா நளீரா......


Loading...