Saturday, 16 May 2015

சாய்ந்தமருதில் மக்கள் கூக்குரலிட்டு எதிர்ப்பு அலை



ஹக்கீமுக்கெதிராக மக்கள் கூக்குரலிட்டு எதிர்ப்புத்தெரிவிப்பு.

சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி அங்குரார்ப்பண வைபவத்துக்கு வந்த அமைச்சர் ஹக்கீமுக்கு மக்கள் குழுமி நின்று கூக்குரலிட்டு விரட்டியடிப்புச் செய்துள்ளனர். 

அட்டாளைச்சேனை, நிந்தவூர் பகுதிகளில் பொதுக்கூட்டம் நடாத்தி விழா எடுத்த அமைச்சர் ஹக்கீமுக்கு சாய்ந்தமருதில் மாத்திரம் விழா எடுக்க முடியாது போய் விட்டது. எத்தனை முறை கல் நாட்டிவிட்டாய்? இன்னும் எத்தனை தடவை கொள்ளையடிக்க முற்படுகிறாய்? என்றெல்லாம் மக்கள் குரலெழுப்பியதைக் காண முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

இனியும் சாய்ந்தமருது மக்கள் ஏமாறத்தயாரில்லை எனவும் விசனம் தெரிவித்தனர். மக்கள் கூட்டமாக குழுமி நின்று விரட்டியடிக்க முற்பட்ட போதே தன்னை சுதாகரித்துக்கொண்டு வாகனத்தில் ஏறிக்கொண்டு அவ்விடத்தை விட்டும் உடனடியாகச் சென்று விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

முன்னர் ஒரு போதுமில்லாதவாறு இன்று சாய்ந்தமருதுக்கு பலத்த பாதுகாப்பு படை பட்டாளங்களுடன் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.


நன்றி - கல்குடா நேசன்.


Loading...