தமது ஆட்சியில் பிழைகள் இடம்பெற்றிருந்தால், அதற்கு தமது அமைச்சர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
தமது ஆட்சியில் அமைச்சர்களும் பங்கு வகித்தனர்.
தற்போதைய ஜனாதிபதியும், தமது ஆட்சியில் அமைச்சராக இருந்தார்.
எனவே அவர் உள்ளிட்ட அனைத்து முன்னாள் அமைச்சர்களும் கடந்த காலத்தில் பிழை ஏற்பட்டிருந்தால் அவற்றுக்கு பொறுப்பு கூற வேண்டு என்று மகிந்த கூறியுள்ளார்.