Saturday, 16 May 2015

உலகின் வலிமைமிக்க செல்ஃபி




உலகின் சக்தி வாய்ந்த இரு தலைவர்கள் தோளோடு தோள் நின்று எடுத்துக்கொண்ட 'செல்ஃபி' புகைப்படம் "வலிமைமிக்க செல்ஃபி" என்கிறது பிரபல போர்ப்ஸ் இதழ்.

பிரதமர் மோடியும், சீன பிரதமர் லீயும் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் பிரபலமடைந்து வருகிறது.

பொதுவாக பிரதமர் மோடி தனது வெளிநாட்டு பயணங்களின் போது கலந்துக்கொண்ட நிகழ்ச்சிகளில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்வது வழக்கம்.

அந்த வகையில், சீனாவில் அரசு முறை பயணமாக சென்றுள்ள மோடி, அந்நாட்டு பிரதமருடன் தோளோடு தோள் நின்று செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த படம் தனது ஃபேஸ்புக், டிவிட்டர் பக்கங்களில் பகிர்ந்துக்கொண்ட சில மணி நேரங்களில் லட்சக்கணக்கான லைக்குகளை குவித்து விட்டார் மோடி.

சக்தி வாய்ந்த இரு நாட்டு பிரதமர்கள் எடுத்துக்கொண்ட இந்த செல்ஃபி படம் குறித்து எழுதியுள்ள ஃபோர்ப்ஸ் இதழ், வலிமையான செல்ஃபி என்று குறிப்பிட்டுள்ளது.
Loading...
  • சிசேரியன்,சட்டவிரோத கருக்கலைப்புபிரதி அமைச்சர் பைசல் காசீம் 27.09.2018 - Comments Disabled
  • முட்டையை அவித்து உண்ணுங்கள்18.10.2015 - Comments Disabled
  • துப்பாக்கிகளை கட்டுப்படுத்த முடியாதது விரக்தியளிக்கிறது: ஒபாமா24.07.2015 - Comments Disabled
  • அனைத்து வங்கிகளுக்கும் 2-ஆம், 4-ஆம் சனிக்கிழமைகள் விடுமுறை:29.08.2015 - Comments Disabled
  • ‘Wild Ass’ Sirisena Decries ‘Wild Ass’ Journalism11.10.2015 - Comments Disabled