ஊழலில் ஈடுபட்ட சர்வதேச கால்பந்து சம்மேளன நிர்வாகிகள் கைது!
சூரிச்: ஊழலில் ஈடுபட்டதாக சர்வதேச கால்பந்து சம்மேளன (ஃபிஃபா) நிர்வாகிகள் 6 பேரை சுவிட்சர்லாந்து அரசு கைது செய்துள்ளது.
சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவின் தலைமை அலுவலகம் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிச் நகரில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பு 111 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டு தற்போது 209 உறுப்பினர் நாடுகளுடன் செயல்பட்டு வருகிறது. உலகிலேயே மிகப் பெரிய விளையாட்டு அமைப்பு இதுதான். ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கும் இந்த அமைப்பின் தலைவராக கடந்த 17 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஜோசப் பிளேட்டர் இருந்து வருகிறார்.
ஜோசப் பிளேட்டர் பதவியேற்றதில் இருந்து ஃபிஃபாவில் ஊழல் மலிந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. வரும் 29ஆம் தேதி ஃபிஃபா தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு மீண்டும் தான் போட்டியிடப் போவதாக தற்போதைய தலைவரான ஜோசப் பிளேட்டர் அறிவித்திருந்தார். ஜோசப் பிளேட்டர் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மரடோனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஜோசப் பிளேட்டர் சர்வாதிகாரி போல செயல்படுவதாகவும் மரடோனா சாடியிருந்தார்.இந்நிலையில் ஃபிஃபாவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான ஆதாரங்களை சுவிட்சர்லாந்து போலீசிடம் அளித்த அமெரிக்க அரசு, அவர்களை கைது செய்யக் கேட்டுக் கொண்டது.
இதற்கிடையே சூரிச் நகரில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள 65வது ஃபிஃபா காங்கிரசில் கலந்து கொள்ள உறுப்பினர்கள் அங்கு குவிந்து கொண்டிருந்தனர். இந்த கூட்டத்தில்தான் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும் நடைபெறவிருந்தது. இதற்காக சூரிச் நகரில் உள்ள பார் ஆ லாக் ஹோட்டலில் தங்கியிருந்த ஃபிஃபா நிர்வாகிகளில் 6 பேரை சுவிட்சர்லாந்து போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பெயர் விபரம் வெளியிடப்படவில்லை. எனினும் ஃபிஃபா அமைப்பின் துணைத் தலைவர் ஜெஃப்ரி வெப் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் எனக் கூறப்படுகிறது. தற்போதைய ஃபிஃபா தலைவர் ஜோசப் பிளேட்டர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பி விட்டதாகத் தெரிகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடந்த ரஷ்யாவுக்கும் 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பினை கத்தார் நாட்டுக்கும் வழங்கப்பட்டதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த நாடுகளுக்கு சாதகமாக வாக்களிக்க லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டவர்கள் மீது அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது.அதோடு போட்டிக்கான டெலிவிஷன் உரிமம் வழங்கப்பட்டிருப்பதிலும் ஊழல் நடைபெற்றிருப்பதாக தெரிகிறது.கடந்த 1900ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.640 கோடி )ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கடந்த 3 ஆண்டுகளாக எப்.பி.ஐ புலனாய்வு அமைப்பு விசாரணையில் ஈடுபட்டிருந்தது. இதன் உச்சக்கட்டமாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
வரும் 29ஆம் தேதி நடைபெறவுள்ள ஃபிஃபா தலைவருக்கான தேர்தலில் தற்போதைய தலைவரான ஜோசப் பிளேட்டர் 5வது முறையாக போட்டிடுகிறார்.அவரை எதிர்த்து போர்ச்சுகல் அணியின் முன்னாள் கேப்டன் லூயீஸ் ஃபிகோ,ஜோர்டான் இளவரசர் அல் பின் அல் ஹசன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
உலகக் கோப்பை 2018: மைதான கட்டுமானப்பணியில் சிறைக்கைதிகள்
வரும் 2018ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடைபெறவுள்ளது. முதல் முறையாக இந்த நாட்டில் உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளதால் பிரமாண்டமாக போட்டியை நடத்திக் காட்ட ரஷ்யா முடிவு செய்துள்ளது. தலைநகர் மாஸ்கோ,செயின்ட் பீட்டர்ஸ்பர்க், கசான்,சமரா, சோச்சி உள்ளிட்ட 11 நகரங்களில் போட்டிக்கான மைதானங்களை புணரமைக்கவும் புதுப்பித்து கட்டவும் ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சுமார் 12.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சம் கோடி) செலவாகும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை 2018: மைதான கட்டுமானப்பணியில் சிறைக்கைதிகள்
வரும் 2018ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடைபெறவுள்ளது. முதல் முறையாக இந்த நாட்டில் உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளதால் பிரமாண்டமாக போட்டியை நடத்திக் காட்ட ரஷ்யா முடிவு செய்துள்ளது. தலைநகர் மாஸ்கோ,செயின்ட் பீட்டர்ஸ்பர்க், கசான்,சமரா, சோச்சி உள்ளிட்ட 11 நகரங்களில் போட்டிக்கான மைதானங்களை புணரமைக்கவும் புதுப்பித்து கட்டவும் ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சுமார் 12.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சம் கோடி) செலவாகும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
