கடந்த 23 ந்தேதி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஏர் பஸ் ஏ330 விமானம் (Airbus A330-300s) ஷாங்காயில் இருந்து விமான ஊழியர்கள் உள்பட 194 பேருடன் சிஙப்பூர் வந்து கொண்டு இருந்தது. விமானம் நடுவானில் 39 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தின் 2 ரோல்ஸ் ராய்ஸ் என்ஜின்களும் திடீர் என செயலிழந்தது.
விமானிகளின் கடுமையான முயற்சிக்கு பிறகு என்ஜின் உயிர் பெற்றது.வானிலை மாற்றம் காரணமாக, விமானத்தின் என்ஜின்கள் செயலிழந்துவிட்டதாக கூறப்பட்டது.விமானி சாமர்த்தியமாகசெயல்பட்டதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கபட்டது.
இதையடுத்து, விமானம் பத்திரமாக ஷாங்காய் விமான நிலையத்தில் தரையிறங்கியதால் 182 பயணிகளும், 12 ஊழியர்களும் பத்திரமாக உயிர் தப்பினர்.இது குறித்த விசார்னைக்கு சிங்கப்பூர் வான்வெளி விபத்து விசாரணை செயலகம் உத்தரவிட்டு உள்ளது.
