|
ஐக்கிய தேசிய கட்சி 100 ற்கும் மேற்பட்ட ஆசனங்களுடன் ஆட்சியைக் கைப்பற்றுமென ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.
> தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பின்னர், பாராளுமன்ற கலைப்பின் பின்னரான நிலைப்பாடு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். > அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுத் தேர்தலின்பின்னர் ஆட்சியை கைப்பற்றியதும், தற்போது பிரதமராக இருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் பிரதமாக இருப்பார் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
> அதேசமயம், 100 நாள் வேலைத்திட்டத்தினை வடகிழக்கு மற்றும் மலையக பகுதியில் முன்னெடுத்திருக்கின்றோமோ, அந்த வேலைத்திட்டங்கள் எதிர்காலத்திலும் நடைபெறும். > நடைபெறவுள்ள தேர்தல் காலத்திலும் அந்த வேலைத்திட்டங்கள் நடைபெறும். இந்த தேர்தலில் தோற்றுப் போனலும், 100 நாள் வேலைத்திட்டத்தில் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். ஆனால், இந்த தேர்தலில் நாம் ஆட்சியைக் கைப்பற்றுவோம் அந்த நம்பிக்கை இருக்கின்றது.
> போரின் போது இறந்த எமது உறவுகளின் ஆத்மா சந்தியடைய வேண்டும்.அதே நேரம் எமது தீர்வு திட்டத்திற்கு உதாரணமாக வலி.வடக்கு வளலாய் பகுதியில் 25 வருடமாக மீள்குடியேற்றம் செய்யப்படாத மக்களின் காணிகளை கையளித்துள்ளனர்.
> அதனூடாக தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கொண்டு வர முடியும். அத்துடன், முதலமைச்சர் நிதியம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் அபிவிருத்திக்கான நிதிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
> போரை முற்றுமுழுதாக முடிப்பதாக கூறி, தமிழ் மக்களின் நகைகளையும், பணங்களையும் சூறையாடிய முன்னைய அரசாங்கத்திடம் உள்ள நகைகளையும், பணத்தினையும் கொடுக்க வேண்டுமென ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றேன்.
> அதேநேரம், கே.பி போன்றவர்களிடம் உள்ள தமிழ் மக்களின் பணத்தினையும், முதலமைச்சர் நிதியத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள வேண்டும்.
> அந்த பணத்தின் ஊடாக வடமாகாண அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும். அதேநேரம், சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் மேலும் கூறினார். >
|
Sunday, 28 June 2015
![]() |
ஐக்கிய தேசிய கட்சி 100 ற்கும் மேற்பட்ட ஆசனங்களுடன் ஆட்சியைக் கைப்பற்றும் -அமைச்சர் விஜயகலா |
Loading...
