லண்டன்: இந்த ஆண்டு ஜுன் மாதம் 30ம் தேதி வழக்கத்தை விட ஒரு விநாடி கூடுதலாக இருக்கும் என்று தெரிகிறது.
அணுவியல் நேரம் எப்போதும் மாறாத இயல்பு உடையது. ஆனால் பூமி ஒவ்வொரு நாளும் ஒரு நொடியில் இரண்டாயிரத்தில் ஒரு பங்கு தாமதமாக சுழல்கிறது. சுழற்சியில் ஏற்படும் தாமதத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்த ஆண்டு ஜுன் 30ல் ஒரு விநாடி நேரத்தை சேர்க்க வேண்டியது அவசியமாகிறது.
