Tuesday, 23 June 2015

பருவநிலை மாற்றம் 50- ஆண்டு ஆரோக்கிய முன்னேற்றங்களை பாதிக்கலாம்'

பெற்றோலிய எரிபொருள் பாவனையை உலக நாடுகள் குறைப்பதன் மூலம் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளலாம்
கடந்த ஐம்பது ஆண்டுகளில் மனிதகுலம் அடைந்துள்ள உடல் ஆரோக்கிய முன்னேற்றங்களை பருவநிலை மாற்றம் மீண்டும் பின்னோக்கி நகர்த்திவிடும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
த லாண்சட் அறிவியல் சஞ்சிகையில் எழுதியுள்ள ஐரோப்பிய மற்றும் சீன விஞ்ஞானிகள், மோசமான காலநிலை மாற்றங்கள் தொற்றுநோய்களும் சத்துக்குறைபாட்டு நோய்களும் மனஅழுத்த நோய்களும் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று கூறியுள்ளனர்.
பெற்றோலிய எரிபொருள் பாவனையைக் குறைப்பது போன்ற வழிகள் ஊடாக பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதன் மூலம் ஆரோக்கிய ரீதியான நன்மைகளை எட்டமுடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
புவி வெப்பநிலை அதிகரிப்பு இரண்டு டிகிரியை விட அதிகமாவதை தடுப்பதற்கு அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கோரியுள்ளனர்.
Loading...