Tuesday, 23 June 2015

பூமியில் 6வது மிக பெரும் அளவிலான பேரழிவை தொடங்கி வைத்து விட்ட மனிதர்கள்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

பூமியில் மிக பெரிய அளவில் 6வது முறையாக நடக்க இருக்கும் பேரழிவை 
Humans-have-triggeredமனிதர்கள் தொடங்கி வைத்து விட்டனர் என்றும் அதனால் தங்களது சொந்த வருங்காலத்தை அச்சுறுத்தல் நிறைந்த ஒன்றாக மாற்றி விட்டனர் என்றும் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.  டைனோசர்களை போன்று மனிதர்களும் பெரிய அழிவை சந்திக்க உள்ளனர் என்பதை ஆய்வாளர்கள் சுட்டி காட்டியுள்ளனர்.

கடந்த 65 மில்லியன் வருடங்களுக்கு முன் பூமியில் இருந்து டைனோசர்கள் முற்றிலும் அழிந்ததை அடுத்து உயிரினங்கள் மீண்டும் அழிவதில் இருந்து தடுப்பதற்கான வாய்ப்பு வேகமுடன் குறைந்து வருகிறது என்று ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கின்றனர்.  கடந்த நூற்றாண்டில் மனிதர்களின் பாதிப்பின்றி 114 மடங்கு அதிகமாக முதுகெலும்பு கொண்ட உயிரினங்கள் மறைந்து போயுள்ளன.  தற்பொழுது உள்ள அழிவுநிலை தொடர்ந்து நடைபெற்றால், உயிரினங்களின் இழப்பு மனிதர்களின் 3 தலைமுறைகளுக்குள் முக்கிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

ஒரு முறை சேதம் ஏற்பட்ட பின் அதிலிருந்து மீண்டு வர பல மில்லியன் வருடங்கள் ஆகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  கடந்த 1900ம் ஆண்டிலிருந்து இதுவரை 400 முதுகெலும்பு உயிரினங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் மறைந்து விட்டன.  அவற்றில் 69 பாலூட்டிகள், 80 பறவைகள், 24 ஊர்வன, 146 இரு வாழ்விகள் மற்றும் 158 மீன் இனங்களும் அடங்கும்.  தற்பொழுது அனைத்து பாலூட்டி வகைகளில் இருந்து 26 சதவீதமும், அனைத்து இரு வாழ்விகளில் இருந்தும் 41 சதவீதமும் அழியும் நிலையில் உள்ளன.

கலிபோர்னியாவின் ஸ்டான்போர்டு பல்கலை கழகத்தின் பேராசிரியர் பால் எர்லிச் கூறும்போது, எவ்வித சந்தேகமும் இன்றி 6வது மிக பெரிய அழிவு நிலையை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளார்.  உயிரினங்களின் இழப்பு சுற்றுசூழலை பாதிப்பதுடன், மோசமான விளைவுகளை மனிதர்கள் உணரும் நிலைக்கு கொண்டு செல்லும் என அறிவியலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  தேனீக்களால் மேற்கொள்ளப்படும் பயிர்களில் நடைபெறும் மகரந்த சேர்க்கை மற்றும் ஈர நிலங்களில் உள்ள நீர்நிலைகளை சுத்தப்படுத்துதல் ஆகிய சுற்றுசூழல் தொடர்பான இரு உதாரணங்கள் மனிதர்களின் 3 தலைமுறைகளுக்குள் இழக்கும் நிலை உள்ளது.  மெக்சிகோவின் தலைமை ஆய்வாளர் டாக்டர். ஜெரார்டோ செபல்லோஸ் கூறும்போது, டைனோசர்களின் வழித்தடத்தை ஒரு நாள் மனிதர்கள் பின்பற்றும் நிலை ஏற்படலாம் என்று எச்சரிக்கை செய்துள்ளார்.  இது தொடர அனுமதிக்கப்பட்டால், அதிலிருந்து மீண்டு வர பல மில்லியன் வருடங்கள் ஆகும்.

அதனுடன், நம்முடைய உயிரினங்களும் வெகு சீக்கிரம் மறைந்து விடும் நிலை ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.  பூமியில் மிக பெரிய அளவிலான பேரழிவுகள் 5 முறை நடந்துள்ளன. கடைசியாக 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமி மீது பெரிய விண்கல் ஒன்று மோதியதை அடுத்து பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு டைனோசர்கள் முற்றிலும் அழிந்து விட்டன.  ஒரு நூற்றாண்டில், 10 ஆயிரம் உயிரினங்களில் 2 பாலூட்டிகள் முற்றிலும் அழிந்து போனது குறித்து இயற்கை சார்ந்த பின்னணி விகிதத்தின்படி ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.  பெரிய அளவிலான பேரழிவிற்வு இடையே இது போன்ற சுற்று சூழல் இழப்பு விகிதங்க்ள் எதிர்பார்க்கப்படலாம்.

கடந்த 100 ஆண்டுகளில் மறைந்து போன உயிரினங்களின் எண்ணிக்கை அடிப்படையில், இந்த பின்னணி விகிதங்கள் தொடர்ந்து நீடிக்குமென்றால் 800 முதல் 10 ஆயிரம் வருடங்களுக்குள் பல உயிரினங்கள் மறைய கூடும்.  இது குறித்து ஆய்வாளர்கள் இறுதியாக கூறுவது, நமது உலக சமூகம் பிற உயிரினங்களை அழிக்க அதிக அளவிலான விகிதத்தில் தொடங்கி விட்டன.  இது 65 மில்லியன் வருடங்களுக்கு முன்பு நடந்ததற்கு இணையாக பெரிய அளவிலான பேரழிவிற்கான விசயத்தையும் தொடங்கி விட்டன என எங்களது ஆய்வுகள் வலியுறுத்துகின்றன.

சுற்று சூழல் அழிவை தற்பொழுது தவிர்ப்பதற்கான பாதுகாப்பு முறைகளை கையாள்வது சாத்தியம் என்றாலும், நேரம் கடந்து விட்டது என அவர்கள் கூறியுள்ளனர்.  உண்மையில் 6வது நடைபெறும் மிக பெரும் அழிவை தடுப்பதற்கு, அச்சுறுத்தல் நிலையில் உள்ள உயிரினங்களை பாதுகாக்க மிக வேகமுடன், பெரிய அளவிலான தீவிர முயற்சிகள் தேவை.  அவைகளின் எண்ணிக்கை மீதுள்ள அழுத்தத்தை குறைப்பதை அடுத்து பொருளாதார பலன் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றில் ஏற்படும் இழப்பை தவிர்க்க முடியும்.  இவை அனைத்தும் அதிக அளவில் உட்கொள்ளும் (குறிப்பாக பணக்காரர்களிடம்) மனித இனத்தின் அளவு மற்றும் வளர்ச்சி மற்றும் பொருளாதார சமச்சீரற்ற நிலை ஆகியவற்றுடன் தொடர்புடையவை.
Loading...